உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடவுளாக சித்தரிக்கப்பட்ட பிரதமர் மோடி; பா.ஜ., பிரமுகர் பூஜை செய்த வீடியோ வைரல்

கடவுளாக சித்தரிக்கப்பட்ட பிரதமர் மோடி; பா.ஜ., பிரமுகர் பூஜை செய்த வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று (செப்.,17) விஸ்வகர்மா ஜெயந்தியும் கொண்டாடப்படுவதால், பா.ஜ., பிரமுகர் ஒருவர் அவரின் படத்தை விஸ்வகர்மாவாக சித்தரித்து பூஜை மற்றும் பால் அபிஷேகம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k9nnbkyr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று (செப்.,17) பிரதமர் நரேந்திர மோடிக்கு 74வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ., தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல அரசியல் தலைவர்களும் மோடிக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். சில கோயில்களில் பா.ஜ., தொண்டர்கள் மோடி பெயரில் சிறப்பு பூஜையும் செய்தனர்.இதேநாளில் விஸ்வகர்மா ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. விஸ்வகர்மா ஜெயந்தி, ஒவ்வொரு ஆண்டும் கன்யா சங்கராந்தி என்று அழைக்கப்படும் புரட்டாசி மாத பிறப்பன்று கொண்டாடப்படும். இன்றை தினத்தில் கடவுள் விஸ்வகர்மாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.இந்த நிலையில், பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள வேத பாடசாலையில் பா.ஜ., பிரமுகர் ஒருவர், பிரதமர் மோடியின் படத்தை விஸ்வகர்மாவாக சித்தரித்து பூஜை மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார். பிரதமர் மோடியை கடவுளாக சித்தரித்து அபிஷேகம் செய்த இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து அந்த பா.ஜ., பிரமுகர் கூறுகையில், ''நவீன இந்தியாவின் விஸ்வகர்மா பிரதமர் மோடி தான். அவர் நம் நாட்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளார்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Easwar Kamal
செப் 17, 2024 21:40

இதற்கு தானே ஆசை பட்டாய் மோடிக்குமாரா


T.sthivinayagam
செப் 17, 2024 19:52

சட்டமன்ற தேர்தல் பிரபஞ்ச சூட்சுமம்


D.Ambujavalli
செப் 17, 2024 18:30

நடிகர்களின் கட் அவுட்களுக்கு பாலபிஷேகம், மாலை மரியாதை செய்வதுபோல் தங்கள் தலைவருக்கு செய்துள்ளார்.ஜெயலலிதாவை அம்மனாக சித்தரித்து வந்த படம் சர்ச்சையைக் கிளப்பியது நினைவுக்கு வருகிறது


என்றும் இந்தியன்
செப் 17, 2024 15:57

ஒன்று இரண்டு கருத்து தவிர மற்ற கருத்து எல்லாம் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு ரூ 200 உபிஸ் கருத்து வாந்தியாகவே இருக்கும் இந்த செய்திக்கு


Oviya Vijay
செப் 17, 2024 14:29

கோமாளிக் கட்சி... கோமாளித் தொண்டன்...


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 17, 2024 15:51

நாம சமாதியில் வெக்கிற தயிர்வடை, முரசொலி இதெல்லாம் யாருக்கும் தெரியாது ன்னு நினைச்சுக்கிட்டு இப்படித்தான் சொல்லணும் ....


அஸ்வின்
செப் 17, 2024 13:49

எதாவது கிடைக்கும்னு


Velan Iyengaar
செப் 17, 2024 13:47

மூளை கம்மி தான் ....எல்லோருக்கும் தெரிந்தது தான் .


Barakat Ali
செப் 17, 2024 14:50

உங்களை எல்லோரும் அறிந்து வைத்திருப்பதை நீங்களும் புரிந்து கொண்டீர்களே .... பலே .....


சமூக நல விரும்பி
செப் 17, 2024 13:29

இப்படி தான் பல அரசியல் வாதிகள் கட்சி மற்றும் அவர் பெயரையும் கெடுத்து கொள்கிறார்கள். அவர்களை திருத்த முடியாது.


theruvasagan
செப் 17, 2024 13:15

எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களைத் தூக்கி தெய்வ பீடத்தில் அமர்த்துவது தெய்வ நிந்தனை மட்டுமில்லை. அவர்களு்க்கும் பெருமையை தராது.


J.Isaac
செப் 17, 2024 23:02

விழுதல் ஆரம்பம்


பாமரன்
செப் 17, 2024 13:05

அந்த பகோடா பீஸை பாராட்டியே ஆகணும்...


சமீபத்திய செய்தி