உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பென்ஷன்: என்ன வித்தியாசம்?

பென்ஷன்: என்ன வித்தியாசம்?

ஓ.பி.எஸ்., எனப்படும் பழைய பென்ஷன் திட்டத்தில், ஓய்வு பெறும்போது, கடைசியாக பெற்ற சம்பளத்தில், 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும்.என்.பி.எஸ்., எனப்படும் தேசிய பென்ஷன் திட்டத்தில், தன் பணிக்காலத்தின்போது, இந்தத் திட்டத்தில் சேமிக்கப்பட்ட தொகையில், 60 சதவீதத்தை மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள தொகை, ஆண்டு திட்டமாக மாற்றப்பட்டு, ஓய்வூதியமாக மாதந்தோறும் பெறலாம். கடைசியாக பெற்ற சம்பளத்தில் 35 சதவீதம் மட்டுமே பென்ஷனாக கிடைக்கும்.யு.பி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தில், கடைசி சம்பளத்தில், 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும். இதைத் தவிர மேலும் பல புதிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை