உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்: காங்., தலைவர் கார்கே பேச்சு

மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்: காங்., தலைவர் கார்கே பேச்சு

புதுடில்லி: ''நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்,'' என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.டில்லியில் உள்ள காங்., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று (மார்ச் 19) நடந்தது. சோனியா, ராகுல், பிரியங்கா, அம்பிகா சோனி, சிதம்பரம், அஜய் மாகன், திக்விஜய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒப்புதல்

அப்போது, லோக்சபா தேர்தலுக்கான காங்., தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை, சிதம்பரம் வாசித்து காட்டி, ஒப்புதல் பெற்றார். தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். 2004ல், 'இந்தியா ஒளிர்கிறது' என்ற முழக்கத்தை எழுப்பி, தேர்தலை சந்தித்த வாஜ்பாய் அரசு தோல்வியை தழுவியது. அதே நிலை தான், தற்போதைய பா.ஜ., அரசுக்கும் ஏற்படும்.கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் உறுதி மொழிகளை, நாட்டு மக்கள் அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. கிராமங்கள், நகரங்களில் உள்ள காங்., தொண்டர்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வீடு தோறும் கொண்டு சேர்க்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறதோ, அவை கண்டிப்பாக நிறைவேற்றப்படும். 1926 முதல், காங்கிரசின் தேர்தல் அறிக்கை, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புக்கான ஆவணமாக கருதப்படுகிறது.

அரசியல் யாத்திரை

ராகுல் மேற்கொண்ட யாத்திரைகள் வெறும் அரசியல் யாத்திரைகளாக அல்லாமல், மிகப்பெரிய மக்கள் தொடர்பு இயக்கமாக அரசியல் வரலாற்றில் குறிப்பிடப்படும். நம் காலத்தில் இவ்வளவு பெரிய யாத்திரைகளை யாரும் மேற்கொண்டதில்லை. ராகுலின் யாத்திரைகளால் மக்களின் பிரச்னைகளை தேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்துக்கு அடிக்கடி செல்வது ஏன்?

சமூக வலைதளத்தில், காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவு:கடந்த சில வாரங்களாக, தமிழகத்துக்கு அடிக்கடி பிரதமர் மோடி செல்கிறார். எனினும் அம்மாநிலத்துக்கு தேவைப்படும் சமயங்களில் அவர் உதவவில்லை. உதாரணமாக, 2023 டிசம்பரில் மிக்ஜாம் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்ட போது, பிரதமர் செல்லவில்லை. மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக தமிழக முதல்வர் கேட்ட பணத்தை, அவர் தரவில்லை. இந்த நெருக்கடியை சரி செய்ய பிரதமர் மோடி திட்டமிடுகிறாரா?இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Naga Subramanian
மார் 28, 2024 06:38

யாரும், காங்கிரஸ், தனது கூட்டத்திற்கு பிறகு, பிஜேபியை போல குப்பையை அகற்றவில்லை என்று யாரும் குறை கூற வேண்டாம் ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் அவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு பிறகு குப்பையை அகற்ற தேவையே இல்லை ஏனெனில், அதிகபட்சமாக, நபர்கள்தான் ஊர்வலமாக செல்வார்கள்

Mohan
மார் 27, 2024 18:14

தமிழ்நாடின் மிக்ஜாம் புயலுக்குப் பின் உண்டான வெள்ளம் தமிழக அரசின் தவறான நிர்வாகம் மற்றும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படாததாலும் கோடியிலான மழைநீர் வடிகால் திட்ட தோல்வியினாலு்ம் தான் நடந்தது என மத்திய பார்வையாளர்களின் அறிக்கையினாலும் நிவாரண நிதி தகுந்த அளவுதான் தரப்பட்டது கோடி சறிய தொகையல்ல சும்மா குண்ட்ஸாக கோடி தா என்றால் ஏதாவது அடிப்படை வேண்டாமா? திமுக அரசின் கையாலாகத்தனத்திற்கு இப்படி வக்காலத்து வாங்க காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும்??

C.SRIRAM
மார் 20, 2024 22:20

மாற்றத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும் என்பது மக்களுக்கு நன்றாவே தெரியும் ஊழல் அரசியல் வியாதியே

Saai Sundharamurthy AVK
மார் 20, 2024 14:56

ஆம் ! காங்கிரஸ் இத்தாலிக்கு போய் விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள். ????????

sugumar s
மார் 20, 2024 14:56

Mallikurjun Karge gives all false promises. People do not want such people in power.

S.SRINIVASAN
மார் 20, 2024 14:03

10 வருசத்துக்கு முன்னாடி இருந்தே இப்ப இல்ல மக்கள் மாற்றத்தை விரும்பியது

ram
மார் 20, 2024 14:00

என்னமோ இவர் உத்தமர் மாதிரி, கர்நாடகாவில் பல கோடிகளுக்கு சொந்தக்காரர் கட்சியில் மூலம் பெற்றது.

வாய்மையே வெல்லும்
மார் 20, 2024 13:27

இத்தாலிக்கு கூண்டோடு போயிட்டு ... வரவேணாம் ... அங்கேயே கிறீன் கார்டு எடுத்து இருந்து அவங்க ஆட்சியில் உங்க நற்பணிகளை தொடர்ந்து செய்யுங்க.. இந்திய நாட்டை விட்டு தயவு செஞ்சு கிளம்புங்க.. உங்களால் எங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்ல

மேலும் செய்திகள்

புதிய வீடியோ