உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக அரசியலில் கோலோச்சும் இந்திய வம்சாவளியினர்

உலக அரசியலில் கோலோச்சும் இந்திய வம்சாவளியினர்

புதுடில்லி: இந்திய வம்சாவளியை சேர்ந்த 261 பேர் பல்வேறு நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.இது தொடர்பாக ராஜ்யசபா எம்பி சாந்தம் சிங் சாந்துவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பலர், வெளிநாடுகளில் அரசியல் நிர்வாகம், சர்வதேச அமைப்புகளில் முக்கிய பதவி வகித்து வருகின்றனர். இந்திய நலனுக்கும், சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் நிலைக்கும் உகந்ததாக உள்ளது. அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவும், முதலீடும் அதிகரித்து வருகிறது.உலகில் 204 நாடுகளில் 3.43 கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர். பாகிஸ்தான், கியூபா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சான் மரினோவில் மட்டும் எந்த இந்தியர்களும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இதில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்ட இந்தியர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்மொரிஷியஸ் -45கயானா -33பிரிட்டன் 31பிரான்ஸ் -24கனடா -22சூரினாம் -21டிரினிடாட் & டொபாகோ - 18மலேஷியா, பிஜி -தலா 18அமெரிக்கா - 6 இந்திய வம்சாவளியினர் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாகி உள்ளனர். இந்திய வம்சாவளியினர்கடந்த ஜனவரி மாத கணக்குப்படி வெளிநாடுகளில் 1,71,81,071 இந்திய வம்சாவளியினரும்1,71,75,122 இந்தியர்களும் வசித்து வருகின்றனர்.இதில் அமெரிக்காவில் 56.93 லட்சம் பேரும்ஐக்கிய அரபு எமீரேட்சில் 39.90 லட்சம் பேரும்கனடாவில் 36.11 லட்சம் பேரும்மலேஷியாவில் 29.35 லட்சம் பேரும்சவுதி அரேபியாவில் 27.47 லட்சம் பேரும்இலங்கையில் 16.07 லட்சம் பேரும்தென் ஆப்ரிக்காவில் 13.92 லட்சம் பேரும்பிரிட்டனில் 13.33 லட்சம் பேரும்ஆஸ்திரேலியாவில் 9.76 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sivakumar
செப் 04, 2025 00:37

உலக அரசியலில் இந்திய வம்சாவளியினர் கோலோச்சுவதை கொண்டாடுவோம், ஆனா இந்தியாவிலே இந்தியர்களுக்கும் இந்தியரான வேறுவம்சாவளியினருக்கும் பிறந்தவர்களை அவர்களின் வெளிநாட்டு பெயரைச்சொல்லி ஓரம்கட்டுவோம். அந்தநாட்டு வழக்கப்படி படிக்கும்போது பகுதிநேர வேலையாக உணவகத்தில் வேலைசெய்தவர்களை பார் டான்சர் என எள்ளி நகையாடுவோம். அதுதான் எங்கள் டிசைன்.


ஆரூர் ரங்
செப் 04, 2025 12:14

இந்திய மருமகளாக ஆகி பல ஆண்டுகளாக பிறந்த நாட்டின் குடியுரிமையை விடாமல் இந்திய கடவுச்சீட்டுக்கும் விண்ணப்பிக்கவில்லை என்றால் எந்த தேசத்தின் மீது பக்தி?


Tamilan
செப் 03, 2025 23:52

உலக நாடுகளிடம் சரணடைந்தவர்கள் . நாட்டை அந்நியர்களுக்கு அடகு வைத்தவர்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 04, 2025 08:03

பாகிஸ்தானை சொல்லுகிறீர்கள் என்று நன்கு புரிகிறது.


சிட்டுக்குருவி
செப் 03, 2025 22:52

இது உண்மையிலேயே தேவையான ஒரு விஷயமா ? மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விஷயம் .அந்தந்த நாட்டுமக்களுக்கே தெரியாத விஷயம் .ஆஸ்திரிலேரியாவில் சமீபமாக என்ன நடந்தது என்று தெரியாதா ? இதுபோன்ற விஷமத்தனமான கேள்விகளுக்கு தனிப்பட்டமுறையில் பதிலளிக்கவேண்டும் .


திகழ்ஓவியன்
செப் 03, 2025 21:37

எல்லாம் மாமிசம் புசிக்கும் இந்தியர்கள்


Barakat Ali
செப் 03, 2025 21:30

மலையாளிகள், பெங்காளிகள் மட்டும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களை திறன் மேம்பாடு செய்து அழைத்துக் கொள்வார்கள் .... வேறு யாரும் அப்படி உதவுவதில்லை .... தமிழர்கள் அவர்களுக்குள்ளாகவே கூட உதவிக்கொள்ள மாட்டார்கள் .....


Natarajan Ramanathan
செப் 03, 2025 22:17

தெலுங்கர்களும் அவ்வாறு தெலுங்கு பேசினாலே அவர்களுக்கு எல்லா உதவியும் செய்வதை பார்க்கலாம். இங்கு அமெரிக்க சியாட்டில் நகரிலேயே ஏராளமான தெலுங்கு பேசும் மக்கள் கவுண்டி என்று சொல்லும் நகராட்சி நிர்வாகத்தில் பதவியில் இருக்கிறார்கள். இங்கே ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதும் அவர்கள்தான். இந்தியாவில் தெலுங்கானா மற்றும் ஆந்திரா என்று பிரிந்தாலும் இங்கே தெலுங்கு பேசுபவர்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.


Kulandai kannan
செப் 04, 2025 17:18

அவர்கள் பூர்வீகம் ஓங்கோலா?


சமீபத்திய செய்தி