உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., காங்கிரஸ் ஆட்சியின் வித்தியாசத்தை மக்கள் பார்க்கின்றனர்: பிரதமர் மோடி

பா.ஜ., காங்கிரஸ் ஆட்சியின் வித்தியாசத்தை மக்கள் பார்க்கின்றனர்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ‛‛10 ஆண்டு கால பா.ஜ., ஆட்சி மற்றும் 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் வித்தியாசத்தை மக்கள் பார்க்கின்றனர் '' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம் மாதா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான ஆசி கேட்டு வந்துள்ளேன். மக்களின் அன்பே என்னை வலிமையாக்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக உங்களுக்கு சேவை செய்ய ஒவ்வொரு நொடியையும் செலவு செய்தேன். காங்கிரஸ் தலைவர்கள் வறுமை ஒழிப்பு குறித்து மட்டுமே பேசினர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன். கடந்த 10 ஆண்டு பா.ஜ., ஆட்சியையும், 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் வித்தியாசத்தையும் மக்கள் பார்க்கின்றனர். மத்தியில் வலிமையான ஆட்சி அமையும் போது, எதிர்காலம் குறித்து அரசு கவனம் செலுத்தும். 60 ஆண்டுகளாக அவர்கள் சாதிக்காததை, 10 ஆண்டுகளில் நாங்கள் சாதித்து உள்ளோம். ரயில்வே, நெடுஞ்சாலை மற்றும் விமானத்துறையில் அதிகளவு முதலீடு செய்துள்ளோம். உள்கட்டமைப்புக்கு காங்கிரஸ் 10 ஆண்டுகளில் முதலீடு செய்ததை நாங்கள் ஒரே ஆண்டில் செய்தோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

J.V. Iyer
ஏப் 30, 2024 15:41

காங்ரஸ் ஆண்டகாலம் இந்தியாவின் இருண்டகாலம் பாஜக, மோடிஜி ஆட்சி இந்தியாவின் பொற்காலம் ஆனால் இன்னும் தமிழகம் இருளகமாக உள்ளது எப்போது விடியுமோ தெரியவில்லை


Vathsan
ஏப் 30, 2024 14:27

பார்த்தோம் பார்த்தோம்


அசோகன்
ஏப் 30, 2024 13:07

இந்தியாவை நேசிப்போம் கொள்ளை கூட்டத்தை விரட்டி அடிப்போம்.. மோடிஜி இந்தியாவை 10 ஆண்டுகளில் வல்லரசாகி உள்ளார்.. காங்கிரஸ் 65 ஆண்டுகளாக இந்தியாவை பிச்சை எடுக்கும் நாடாக வைத்திருந்தார்கள்


Narayanan Muthu
ஏப் 30, 2024 12:42

பாஜக பின்னடைவை சந்திக்கும் மாநிலங்களில் மஹாராஷ்டிராவும் ஒன்று மஹாராஷ்டிராவில் இவரின் பிரச்சாரம் இம்முறை எடுபடாது


திராவிட மாடல் மனித நேய மாடல்
ஏப் 30, 2024 12:39

இண்டியா கூட்டணி வென்றால் பிரதமராக ஸ்டாலின் ஓர் ஆண்டு, மம்தா அடுத்த ஆண்டு” - அமித் ஷா மாதத்திற்கு ஒரு பிரதமர் என்று வந்தாலும், தற்போதைய ஆட்சிக்கு மாற்றாக இருந்தால் நிச்சயம் நாட்டு மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள்


Narayanan Muthu
ஏப் 30, 2024 12:39

செய்த வினைகளுக்கான தண்டனையை அறுவடை செய்தே ஆகவேண்டும்


Narayanan Muthu
ஏப் 30, 2024 12:38

மக்கள் அப்படி பார்க்க தொடங்கினாள் பாஜகவிற்கு மக்களின் வாக்குகள் கிடைக்கவே கிடைக்காது


குமரி குருவி
ஏப் 30, 2024 12:36

காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்து இருந்தால் இந்தியா நிலை மோசமாகி இருக்கும்..


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ