உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் நிச்சயம்: ஜெய்சங்கர்

ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் நிச்சயம்: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: ‛‛ ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிச்சயம் நிரந்தர இடம் கிடைக்கும். அதற்கு இந்த முறை கடினமாக உழைக்க வேண்டும்'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் கலந்துரையாடல் நடந்தது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், ஐ.நா., பாதுகாப்பு சபையில், இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு ஜெய்சங்கர் அளித்த பதில்: 80 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஐ.நா., சபையின், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைப்பதை 5 நாடுகள் முடிவு செய்கின்றன.அப்போது உலகில் 50க்கும் மேற்பட்ட சுதந்திர நாடுகள் இருந்தன. தற்போது அது 193 ஆக அதிகரித்து உள்ளது. ஆனால், 5 நாடுகள் மட்டுமே தற்போதும் முடிவு செய்கின்றன. அவர்களிடம் ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்பது விசித்திரமானது. இந்த கோரிக்கைக்கு சிலர் ஒப்புதல் தெரிவிக்கின்றனர். முன்னின்று செயல்படுகின்றனர். பிறர் தடையை ஏற்படுத்துகின்றனர். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.ஆனால், தற்போது மாற்றம் தேவை எனவும், இந்தியாவிற்கு நிரந்தர இடம் தர வேண்டும் என உலகம் முழுவதும் குரல் எழுந்துள்ளது. இந்த உணர்வு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நிச்சயம் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கும். ஆனால், கடின உழைப்பின்றி எதையும் சாதிக்க முடியாது. நாம் கடினமாக உழைக்க வேண்டும். இந்த முறை, நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். இதற்கான முன்னெடுப்பை இந்தியா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஒன்றாக சேர்ந்து எடுத்து உள்ளன. ஐ.நா.,வுக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஐ.நா., சபை பலவீனமாக உள்ளதாக கருத்து எழுந்துள்ளது. உக்ரைன் போர் தொடர்பாக ஐ.நா., சபையில் சிக்கல் உள்ளது. காசா விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை. அழுத்தம் அதிகரிக்கும்போது, இந்தியாவிற்கு நிரந்தரமான இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Karthikeyan
ஏப் 04, 2024 14:54

ஐ நா சபையில நிரந்தரம் இடம் கிடைக்காததற்கு தமிழன் என்ன செய்தான் தெரிவியுங்கள் நண்பரே


கனோஜ் ஆங்ரே
ஏப் 02, 2024 19:35

இதையே எத்தனை நூற்றாண்டுக்கு சொல்லிட்டு இருப்பீங்க? உங்க பிரதமர்தான், உலகத்தில் உள்ள வல்லரசு முதல் சாதாரண நாட்டுக்குக்கூட போய்ட்டு வந்தாரே ஏன், இன்னும் பாதுகாப்பு சபையில் நம் நாட்டுக்கு இடம் கொடுக்க ஓட்டு போடமாட்டேங்குறானுங்க? போட மாட்டானுங்க


manokaransubbia coimbatore
ஏப் 02, 2024 21:01

அண்ணே வரலாறை கொஞ்சம் படிங்கண்ணே சும்மா முரசொலி மட்டும் பதில் கூவ கூடாது ஏன் நமக்கு வந்த வாய்ப்பை இழந்தோம் இப்போது நமக்கு ஆதரவாக வல்லரசுகள் நான்கு ஆதரவு தந்தாலும் சீனா தன் வீட்டோ ஓட்டு போட்டு தடுத்து விடுவான் சும்மா வாயில் வடை சுட கட்டுமரத்தாள்தான் முடியும் நீங்க பாட்டுக்கு கூவுங்கண்ணே


Ramesh
ஏப் 02, 2024 22:13

புத்தி சாலி அதான் பப்புவுக்கு சாமரம் வீசுற நீ அதுக்கு தான் லாயக்கு


manokaransubbia coimbatore
ஏப் 02, 2024 18:16

நமக்கு வழிய கிடைத்த நிரந்தர உறுப்பினர் இடத்தை வேண்டாம் என்று சொல்லி சீனாவுக்கு கொடுக்க சொன்னது நேரு நம் நாட்டு தலையில் நாமே மண் அள்ளி போட்டுக்கொண்ட செயல்களை நேரு நிறையவே செய்துள்ளார்


கனோஜ் ஆங்ரே
ஏப் 02, 2024 19:39

ஆமாய்யா ஆ, ஊன்னா நேரு, இந்திராகாந்தின்னு புளுக ஆரம்பிச்சுடுங்க? நீங்க பத்து வருஷமா என்னத்த செஞ்சீங்கன்னு கேட்டா உடனே “காங்கிரஸ், நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி”ன்னு ரீல் சுத்த ஆரம்பிச்சுடுவானுங்க கறுப்பு பணத்தை நூறு நாளில் ஒழிச்சிடுவேன்னு ல வடை சுட்டீங்க, இன்னுமா வடை வேகல? அமலாக்கத்துறை எங்க நுழைஞ்சாலும் கட்டு கட்டா கறுப்பு பணத்தை புடிக்குது எங்கேயா கறுப்பு பணத்தை ஒழிச்சீங்க? ஏழை, எளிய, விவசாய, கூலிக்காரங்களோட கோவணத்தை மட்டும் இன்னும் உருவல? மத்த எல்லாத்தையும் உருவிட்டீங்க மதத்தின் பெயரைச் சொல்லி கடவுளின் பெயரைச் சொல்லி தேசியம் என்ற பெயரைச் சொல்லி “இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே”


ponssasi
ஏப் 02, 2024 17:37

ஐந்து நாடுகளில் சீனா தவிர மற்றவை இந்தியாவை சேர்த்துக்கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டன இன்னும் அம்பது ஆண்டுகள் ஆனாலும் சீனா தனது முடிவை மாற்றிக்கொள்ளாது மேலும் இலங்கை, பாகிஸ்தான் மாலத்தீவு இன்னும் சில நாடுகளை இந்தியாவிற்கு எதிராக கோஷம்போடவைக்கும் ஒரே தீர்வு ஒரே கருத்தியல் கொண்ட நாடுகளை ஒன்றுதிரட்டி ஒரு புது அமைப்பை உருவாக்கவேண்டும் , ஐநாவில் எதுவெல்லாம் பலவீனமானது என அறிந்து அதையெல்லாம் புறம்தள்ளி ஒரு வலுவான அமைப்பை வளர்ந்த வளரும் நாடுகள் அமைக்கவேண்டும்


GMM
ஏப் 02, 2024 17:33

ஜனநாய நாடுகள் மட்டும் ஓட்டளிக்கும் உரிமை ஜனநாயகம் இல்லா நாடுகள் உறுப்பினர் மட்டும் அவர்களின் நிரந்தர உறுப்பினரான அங்கீகாரத்தை நீக்க வேண்டும்


Srinivasan Krishnamoorthi
ஏப் 02, 2024 17:19

இந்தியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், ஜப்பான் & சவூதி அரேபியா என ஐந்து நாடுகள் பதினொரு நாடுகளாக செக்யூரிட்டி கவுன்சில் உறுப்பினர்கள் ஆக வேண்டும் இது ஆறு நாடுகள் பெரும்பான்மை வகித்தல் என்று இருக்க வேண்டும்


Kasimani Baskaran
ஏப் 02, 2024 17:15

ஆரம்பிக்கும் பொழுதே வாங்கியிருக்க வேண்டும் ஆனால் இந்தியா முன்னேறுவது பலருக்கு பிடிக்கவில்லை குறிப்பாக வெள்ளைக்காரன் உருவாக்கி அகிம்சையாக இருக்க வேண்டும் தேவையற்ற செலவுகளை செய்ததாக லீகுவாயூ தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்


Srinivasan Krishnamoorthi
ஏப் 02, 2024 17:14

நல்லது சீக்கிரம் நடந்தால் சீனா தன்னிச்சையாக நம்மை ஒதுக்க முடியாது


Bala
ஏப் 02, 2024 17:09

சீனர்களும் தமிழர்களும் இருக்கும் வரை நடக்காது வாழ்க தமிழ்


தமிழ்
ஏப் 02, 2024 18:58

அப்போ நீ தமிழ்நாட்டுக்கே வரவேண்டாம்.


Karthikeyan
ஏப் 04, 2024 14:57

ஐ நா சபையில நிரந்தர இடம் கிடைக்காததற்கு தமிழன் என்ன செய்தார்


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ