உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாகப்பாம்புடன் சண்டையிட்டு எஜமானியை காப்பாற்றியது வளர்ப்பு நாய்!

நாகப்பாம்புடன் சண்டையிட்டு எஜமானியை காப்பாற்றியது வளர்ப்பு நாய்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழாவில், தனது உரிமையாளரை பாதுகாப்பதற்காக, வளர்ப்பு நாய் நாகப்பாம்புடன் சண்டையிட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் ஆலப்புழாவில், துஷாரா என்பவர் ராக்கி என்ற செல்ல நாயை வளர்த்து வந்தார். அவரது வீட்டு முற்றத்தில், துஷாரா இருந்த நிலையில், அங்கு நாகப்பாம்பு ஊர்ந்து வந்தது. அதைக்கண்ட வளர்ப்பு நாய், பாம்புடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டது. இதில், பாம்பு பல முறை கொத்தியதில் நாய்க்கு காயம் ஏற்பட்டது.இருந்தபோதும், சண்டையில் இருந்து பின் வாங்காத நாய், பாம்பை கடித்துக் கொன்று விட்டது. பாம்பின் விஷத்தால் நாய்க்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக உடனடியாக அதை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு துஷாரா கொண்டு சென்றார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிபின் பிரகாஷ் மற்றும் அவரது குழுவினரின் மேற்பார்வையில் பல நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, ராக்கி குணமடையத் தொடங்கி உள்ளது.இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு, வெளிநாட்டில் பணிபுரியும் துஷாராவின் கணவர் சுபாஷ் கிருஷ்ணா வீடு திரும்பினார். தனது மனைவியை காப்பாற்றிய ராக்கியைக் காண ஓடோடி மருத்துவமனை சென்றார். தற்போது அவர் ராக்கி நாயை பிள்ளை போல் பாதுகாத்து வருகிறார். ராக்கியின் துணிச்சலும், எஜமானியை காப்பதற்காக ஆக்ரோஷமாக சண்டையிட்டதும், அக்கம் பக்கத்தினர் அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளது. அனைவரும் ராக்கியை ஹீரோ என பாராட்டி வருகின்றனர்.ராக்கியின் துணிச்சலான செயல் குறித்து உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள் மக்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தாமரை மலர்கிறது
அக் 19, 2025 00:01

மனுஷன் போடும் ஒரு சின்ன ரொட்டித்துண்டுக்காக தனது இன் உயிரை இழக்க எந்த நாயும் தயார். ஆனால் இது புரியாமல் டெல்லியில் எல்லா நாய்களையும் ஜெயிலில் அடைத்து கொன்றுபோடுங்கள் என்று நீதிபதி உத்தரவு போட்டார். நாய் பசி அல்லது பயத்தால் தான் கடிக்கிறது. தெரு நாய்களுக்கு சாப்பாடு போடாதீர்கள் என்று ஒரு கும்பல் மிரட்டுகிறது. பசியோடு இருந்தால் தான் நாய்கள் கடிக்கும். கல்லையெடுத்து அடிப்பதால், மனிதர்களை கண்டாலே விரோதிகளாக நாய்கள் பார்க்க தொடங்கிவிட்டன. பயத்தால் கடிக்கின்றன. அன்போடு பாருங்கள். சாப்பாடு போடுங்கள். உங்களை ஒருநாளும் கடிக்காது. உங்களுக்காக உயிரை விடும் ஜீவன் தான் நாய். நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யவேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 18, 2025 21:58

வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பை அதே வீட்டில் வளர்ந்து வரும் நாய் சண்டையிட்டு போராடி விரட்டி உள்ளது. இதிலே எஜமானியை காப்பாற்றியது என்பது பில்ட் அப் போல தெரிகிறது


KOVAIKARAN
அக் 18, 2025 21:40

பொதுவாக நாய் நன்றியுள்ளது என்று கூறுவார்கள். ஆனால் திருமதி துஷாரா வளர்த்த நாய் நன்றியுடன் வீரத்தையும் காட்டியுள்ளது. அந்தளவிற்கு அந்த செல்ல நாயை வளர்த்த துஷாரா மற்றும் அவரது கணவருக்கும் பாராட்டுக்கள்.


RASIPURAM VIJAYAKUMAR CEO
அக் 18, 2025 20:47

unmai


Balasubramanian
அக் 18, 2025 20:27

நாய் காவல் தெய்வம் அசுரர்கள் பசுக்களை திருடுவதை தடுத்து தேவர்களை காக்க சரமா என்ற நாய் படைக்கப் பட்ட குறிப்புகள் ரிக் வேதத்தில் உண்டு அதன் வம்சாவளி சாரமேயம் - என்பது சம்ஸ்கிருதத்தில் நாய்களைக் குறிக்கும் சொல்! தன் யஜமானரைக் காத்த ராக்கி சீக்கிரம் குணமடைய வாழ்த்துகிறோம்


Govi
அக் 18, 2025 19:40

உண்மைதான் எங்க வீட்டு பைரவன் பப்புலு இரண்டும் பாம்பை கண்டால் விடாது. தோட்டதிற்கு இரவு என் கூடவே வரும் நன்றியுள்ள ஜீவன் என்றால் அது நாய் தான்


RAMESH KUMAR R V
அக் 18, 2025 19:19

உண்மை நன்றியுள்ள ஜீவன்


குமார்
அக் 18, 2025 19:00

நன்றியுள்ள ஜீவன்... எங்கள் வீட்டு நாயும் பல முறை பாம்பு வரும் போது குரைத்து எங்களை அலெர்ட் செய்து காப்பாற்றி உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை