உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாய்களை கொன்றவர்களை பற்றி தெரியுமா! ரூ.50,000 வெகுமதி அறிவித்தது பீட்டா

நாய்களை கொன்றவர்களை பற்றி தெரியுமா! ரூ.50,000 வெகுமதி அறிவித்தது பீட்டா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதுடில்லியில் தெரு நாய்களை கொன்றவர்களை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50,000 வெகுமதி அளிக்கப்படும் என்று பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது.சில நாட்கள் முன்பாக கிழக்கு டில்லியில் உள்ள கபீர் நகரில் 2 தெருநாய்களை மர்ம நபர்கள் குத்திக் கொன்றனர். அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந் நிலையில், விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தெருநாய்களை கொன்றவர்கள் பற்றிய துப்புக் கொடுத்தால் அவர்களுக்கு ரூ.50,000 வெகுமதி தரப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து பீட்டா அமைப்பு கூறி உள்ளதாவது; விலங்குகளை கொல்வது, கொடுமைப்படுத்துவது என்பது உளவியல் பிரச்னையால் ஏற்படுவதாகும். இவர்கள் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள். ஆகையால், அனைவரின் பாதுகாப்புக்காக இந்த வழக்கு பற்றி ஏதேனும் தெரிந்தவர்கள் உடனடியாக போலீசில் தெரிவிக்கலாம்.தெரிந்த விவரங்களை போலீசாரிடம் கூற அவர்கள் முன்வர வேண்டும். தெரு நாய்களை கொன்றவர்கள் யார் என்ற விவரங்கள் அல்லது அடையாளங்கள் ஏதேனும் தெரிய வந்தால் அவர்களுக்கு ரூ.50,000 வெகுமதி அளிக்கப்படும். தெரிந்த உண்மைகளை அவர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு பீட்டா அமைப்பு கூறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

visu
டிச 15, 2024 08:15

அமெரிக்காவில் தெருவில் நாய்களை விட முடியாது பராமரிப்பு இல்லாத நாய்களை என்ன செய்கிறார்கள் தெரியவில்லை இங்க தொல்லை அதிகம் peta அயல்நாட்டு நிதிஉதவிய வைத்து நாய்களுக்கு காப்பகம் அமைக்கலாம்


தமிழ்வேள்
டிச 14, 2024 20:39

ஒரே அறையில் பீட்டா உறுப்பினர்கள் மற்றும் பத்து தெருநாய்களை ஒன்றாக அடைத்து ஜஸ்ட் ஒருநாள் வைத்திருந்தால் போதும்.. பீட்டா பயல் எவனும் தெருநாய்களுக்கு குடை பிடிக்க மாட்டான்..


Natarajan Ramanathan
டிச 14, 2024 19:13

PETA must be banned immediately in India.


Srameshsrivi
டிச 14, 2024 18:55

இந்த "பீட்டா "அமைப்பு என்பது உலகெங்கும் உள்ளது. இது வெளிநாடுகளில் பணம் வாங்கிக்கொண்டு, இங்கு அகிம்சை பற்றி உபதேசம் செய்யும் அமைப்பாகும். முழுக்கு முழுக்க பிராடு பிடிச்ச அமைப்பு. தெருவில் போகும் வெறி நாய், சொறி நாய்களுக்கெல்லாம் அக்கறைப்படும் இந்த பீட்டா அமைப்பு, ரம்ஜான், பக்ரீத், மொஹரம் பண்டிகைகளின் போது, பிரியாணிக்காக வெட்டப்படும் ஒட்டகம், பசு மாடு ஆகியவற்றைப்பற்றி பேசட்டும் தைரியம் இருந்தால்....


என்றும் இந்தியன்
டிச 14, 2024 18:31

பீட்டாவின் அடுத்த அறிவிப்பு இப்படி இருக்குமோ??? மீன் கோழி ஆடு மாடு இவற்றை கொன்றவர்களை பற்றி தெரியுமா ரூ 1,00,000 வெகுமதி அறிவித்தது பீட்டா


visu
டிச 15, 2024 19:42

அதுல தலையிட மாட்டாங்க .மாடுகளை ஒட்டகங்களை ஆடுகளை கொல்வது பற்றியெல்லாம் மூச்சே விட மாட்டாங்க


Loganathan Kuttuva
டிச 14, 2024 17:40

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் .உணவுக்காக அலைந்து திரியும் நாய்கள் அதிகம் .


தமிழ்வேள்
டிச 14, 2024 20:34

கருத்தடை செய்யப்பட்டாலும் நாய் கடிக்கும் ரேபீஸ் தொற்று கிருமி இல்லாமல் எந்த நாயும் இல்லை... அழித்து விடுவதே சரியான தீர்வு..


raja
டிச 14, 2024 16:29

பீட்டா அமைப்பை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும்... இவர்கள் யார் எதற்க்காக இங்கு வந்து நியாயம் பேசுகிறார்கள் மேலை நாடுகளில் வளர்க்கும் நாய்களையே வெளியில் கொண்டு போய் விட்டுவிடுகிறார்கள் ஒருசிலர் .அதை எல்லாம் கண்டுகொள்ளாத இந்த பீட்டா அமைப்பு தெருவில் நடமாடும் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு வரித்துக்காட்டுகிறது....


Anand
டிச 14, 2024 15:59

நாய் கடித்தால் பீட்டாக்காரனை கைது செய்யலாமா யுவர் ஹானர்?


Pandi Muni
டிச 14, 2024 18:50

திருடனுங்க தான் நாய்க்கடி வாங்குறானுங்க ஆனந்த் எப்படி?


Kumar Kumzi
டிச 14, 2024 15:01

ஏழை மக்ககளுக்கு மிகவும் பலனளிக்கும் ஒரே விலங்கினம் பசுக்கள் அதை கொலை செய்து தின்னும் மூர்க்க காட்டேரிகளுக்கு தண்டனை இல்லையா போலி பீட்டா


Ramalingam Shanmugam
டிச 14, 2024 14:42

ஜல்லி கட்டு வருது தூக்கி வச்சி லாடம் கட்டணும் மாட்டை வெட்டி திண்ணுபவனை கேள் பார்க்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை