உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் போட்டோஷூட்: கோர்ட் கண்டிப்பு!

சபரிமலையில் போட்டோஷூட்: கோர்ட் கண்டிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பத்தனம்திட்டா: சபரிமலை 18 படிகளில் போலீசார் எடுத்த படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, ஐகோர்ட் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.இச்சம்பவம் குறித்து சபரிமலை சன்னிதானத்தின் சிறப்பு அதிகாரி பைஜூ அளித்த புகாரின் பேரில், ஏ.டி.ஜி.பி., ஸ்ரீஜித் விரிவான அறிக்கை கேட்டுள்ளார். போட்டோஷூட்டுக்கு வி.ஹெச்.பி.,கேரள பிரிவு அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரளா ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:சன்னிதானத்தில் பணிக்கு வந்த போலீசார் திரும்பும் முன் போட்டோ எடுத்துக்கொண்டுள்ளனர். சபரிமலை 18ம் படியில் இதுபோன்ற சம்பவங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது.சன்னிதானத்தில் போலீஸ் அதிகாரிகளின் பணி பாராட்டுக்குரியது. இருப்பினும், இத்தகைய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படக்கூடாது. சன்னிதானத்தில் மொபைல் போன் பயன்படுத்த கட்டுப்பாடு தேவை. சன்னிதானம் அனுமதி இல்லாமல் போட்டோ, வீடியோ எடுக்க அனுமதிக்க கூடாது என்பதை தெளிவாக பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வைகுண்டேஸ்வரன்
நவ 26, 2024 22:22

என்னத்த அருமை? சபரிமலை யில் செல்பி எடுக்க ஒரு தனி மேடையே அமைத்திருக்கிறார்கள்.


Rajan
நவ 26, 2024 21:29

இங்கே டான்ஸே ஆடுறாங்க


Sekar
நவ 26, 2024 20:11

அருமை அருமை அருமை அருமை


Barakat Ali
நவ 26, 2024 19:42

தங்களது சொந்த மதக் கட்டுப்பாடுகள் / ஆகம விதிகள் / ஆலய விதிகள் ஆகியவற்றிலேயே நம்பிக்கை இல்லாதவர்கள் .......


Prasad VV
நவ 26, 2024 19:09

சன்னிதானத்தில் மொபைல் போன் பயன்படுத்த கட்டுப்பாடு தேவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை