உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் ஸ்பை கேமரா பயன்படுத்தி பெண்ணை வீடியோ எடுத்த விமானி கைது

டில்லியில் ஸ்பை கேமரா பயன்படுத்தி பெண்ணை வீடியோ எடுத்த விமானி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஸ்பை கேமரா' எனப்படும் கண்ணுக்கு தெரியாத சிறிய ரக ரகசிய கேமராவை பயன்படுத்தி, பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த தனியார் நிறுவன விமானியை, டில்லி போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், கிஷன்கர் கிராமத்தில் உள்ள ஷானி பஜாருக்கு கடந்த மாதம் 30ம் தேதி இரவு 10:30 மணிக்கு சென்றார். அங்கு, சாலையோரம் நின்றிருந்த நபரின் செயல் சந்தேகப்படும்படியாக இருந்துள்ளது. இதையடுத்து, அவரை அந்த பெண் கண்காணித்துள்ளார். அவர் கையில் வைத்திருந்த, 'சிகரெட் லைட்டர்' உள்ளே, 'ஸ்பை கேமரா' பொருத்தி, அங்கு வரும் பெண்களை வீடியோ எடுத்தது தெரிய வந்தது. இது குறித்து, போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். இதையடுத்து, அப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, சந்தேகத்துக்குரிய நபரின் அடையாளம் தெரிந்தது. அவர், உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியைச் சேர்ந்த மோஹித் பிரியதர்ஷி, 31, என்பது தெரிய வந்தது. இவர் தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வருகிறார். விசாரணை அவரிடம் நடத்திய விசாரணையில், புகார் அளித்த பெண்ணை தவறான முறையில் வீடியோ எடுத்ததை அவர் ஒப்புக் கொண்டார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், தனிப்பட்ட திருப்திக்காக இவ்வாறு வீடியோ எடுத்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, மோஹித்தை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ