உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது பொருத்தமற்றது: கேரள முதல்வர் பினராயி விஜயன் கோபம்

ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது பொருத்தமற்றது: கேரள முதல்வர் பினராயி விஜயன் கோபம்

திருவனந்தபுரம்: ''காங்., எம்.பி., ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது பொருத்தமற்றது,'' என கேரள முதல்வர் பினராயி விஜயன் கோபமாக தெரிவித்துள்ளார்.கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்., போட்டியிடுகிறது. இவர்களுக்கு எதிராக முக்கியமாக இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றன. வயநாடு தொகுதி காங்., வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூ., சார்பில் அதன் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். இது இண்டியா கூட்டணியில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: பா.ஜ.,வை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல் வயநாட்டில் போட்டியிடுவது பொருத்தமற்றது. அவர் கேரளாவில் முக்கிய அரசியல் சக்தியாக விளங்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போராடுவதற்காக வந்துள்ளார். இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரி தலைவர் ஆனிராஜாவுக்கும் எதிராக ராகுல் போட்டியிடுவது என்ன நியாயம்.அவர் வயநாட்டில் பா.ஜ.,வை எதிர்த்து போட்டியிடவில்லை. எங்களுக்கு எதிராகவே போட்டியிடுகிறார். காங்.,தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வேட்டையாடி வருகிறது. கலால் கொள்கை தொடர்பாக டில்லி அரசுக்கு எதிராக காங்., புகார் அளித்தது. இந்த நடவடிக்கையின் இறுதியில் தான் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.குடியுரிமை திருத்த சட்டம் கொள்கைகளால் இந்தியாவின் மதசார்பின்மையை மத்திய பா.ஜ., அரசு அழித்து வருகிறது. ராகுல் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். ஆனால் சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Venkat, UAE
ஏப் 03, 2024 17:43

நாங்களும் காங்கிரஸும் கூட்டணிதான் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் நாங்க கேரளா முழுவதும் காங்கிரசுக்கு எதிராக எலெக்ஷன்ல நிப்போம் ஆனா காங்கிரஸ் எங்களுக்கு எதிராக நிற்க கூடாது ராகுல் காந்தி வயநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக போட்டியிடக் கூடாது அப்படி போட்டியிட்ட்டேங்கன்னா காங்கிரெஸ்ஸையும் பாருங்க கேரளாவை விட்டு வெளியேவந்து தமிழ் நாட்டுக்குள்ள வந்த உடனேயே நாங்க ரெண்டு பேரும் கட்டி கட்டிபுடிச்சுக்கிட்டு ஒருத்தரையொருத்தர் பாராட்டி பேசுறத பார்க்கிறதுக்கு


kumarkv
ஏப் 03, 2024 14:02

எங்கு போய் ...ணும் என்ற உரிமையை அவருக்கு கொடுக்க மாட்டீர்களா


lana
ஏப் 03, 2024 12:35

அவ்வளவு ரொசம் உள்ள கட்சி எனில் கூட்டணி விட்டு வெளியேறி விட வேண்டும். அப்புறம் எதுக்கு இந்த வெட்டி வீராப்பு


duruvasar
ஏப் 03, 2024 12:07

இவரே ஒரு செல்லா காசு , இவர் அடுத்தவனை அலுமினிய காசு என்று சொல்வது நகைச்சுவை


அருண் பிரகாஷ் மதுரை
ஏப் 03, 2024 11:58

டில்லி அரசின் கலால் கொள்கைக்கு எதிராகப் புகார் கொடுத்து கெஜ்ரிவால் ஜெயிலுக்குப் போவதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியா????.இதை ஏன் கெஜ்ரிவால் கைதுக்கு நடந்த கண்டனக் கூட்டத்தில் நீங்கள் சொல்லவில்லை.அப்படி சொல்லி இருந்தால் கூட்டணிக் கட்சி என்று கூடப் பாராமல் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த கட்சி என்று மக்களிடம் கூறி ஓட்டுக் கேட்டு இருக்கலாம்..?????.இப்படித்தான் 2014 தேர்தலில் 2G என்ற ஒற்றைச் சொல் காங்கிரஸ் தலைவிதியை மாற்றி எழுதியது...


Kannan
ஏப் 03, 2024 11:16

ஹிந்தி பெல்ட் ராகுலுக்கு தோல்வியே மோடி மூன்றாவது அலையில் வேகம் குறைந்தாலும் ராகுல் போன்ற தலைவருக்கு வெற்றி இல்லை வயநாடு வாக்காளர்கள் மண்ணின் மைந்தர்களையே காப்பாற்ற வேண்டும்


பேசும் தமிழன்
ஏப் 03, 2024 11:09

என்னை கேட்டால்... உங்கள் இருவரையும் கேரளா மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்.... நீங்கள் இங்கே எதற்க்காக கான் கிராஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட வேண்டும்.... தப்பி தவறி வெற்றி பெற்றாலும்.... டில்லியில் போய் கான் கிராஸ் கட்சிக்கு தான் ஆதரவு கொடுக்க போகிறீர்கள்.... அதற்க்கு பேசாமல் நீங்கள் போட்டியிடாமல் கான் கிராஸ் கட்சிக்கு ஆதரவு கொடுக்கலாம் அல்லவா.... உங்களை யார் தடுத்தது ???


S.PALANIVELU
ஏப் 03, 2024 10:12

இதுக்கு பேருதான் இந்தியா கூட்டணி இவங்கதான் இந்தியாவை காப்பாத்த போறாங்களா தோழர்கள் அறிவாலய சரணம் போடும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் தோழர்கள் பதில் சொல்வாங்களா


MANI DELHI
ஏப் 03, 2024 10:02

வெக்கங்கெட்டவனும் மானம் கெட்டவனும் பேசும் பேச்சு தான் இந்த உண்டியல் குலுக்கியின் பேச்சு


Sivasankaran Kannan
ஏப் 03, 2024 09:47

எந்த தொகுதியும் தகுதி இல்லா தொகுதியே அவர் போட்டியிட வேண்டிய தொகுதி எங்கும் இல்லை அவர் தகுதியே வேற லெவல்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ