உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதூறு வழக்கில் ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷியை கைது செய்ய திட்டம்

அவதூறு வழக்கில் ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷியை கைது செய்ய திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மீது பா.ஜ., அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக அவருக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளதால் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.டில்லி பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் டில்லி இவர், டில்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மீது கீழமை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ. 25 கோடி வரை பேரம் பேசி விலைக்கு வாங்கிட பா.ஜ., திட்டமிட்டு வருகிறது என சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இது கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த கோர்ட் நாளை (மே.29) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. இதில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Azar Mufeen
மே 29, 2024 05:57

இந்த அம்மா தப்பா சொல்லிட்டாங்க ஒரு mlaக்கு தலா 100கோடி வரை பேரம் பேசியிருக்கிறார்கள் பாஜகவினர்.


Indhuindian
மே 29, 2024 00:41

சீக்கிரம் பன்னுங்க அலப்பறை தாங்கமுடியலே


venugopal s
மே 28, 2024 22:51

இவர் என்ன கொலை செய்தாரா இல்லை கொள்ளை அடித்தாரா கைது செய்ய? அப்படிப் பார்த்தால் பாஜக தலைவர்கள் எல்லோரையும் இந்நேரம் கைது செய்து இருக்க வேண்டும்!


rama adhavan
மே 28, 2024 22:06

நுநலும் தன் வாயால் கெடும் என்னும் மொழி இவருக்கு மிகவும் பொருந்தும். இவர் கேஜரிக்கு ரொம்பவும் சொம்பு அடிப்பவர்.


sankaranarayanan
மே 28, 2024 21:08

இந்த அம்மாவிற்கு இந்த வாய் வேண்டவே வேண்டாம் சப்பைக்கட்டு கட்டி வீணாக வாயைக்கொடுத்து இப்போது மாட்டிக்கிட்டாங்க என்ன செய்வது இனியாவது வாயை மூடிக்கொண்டிருந்தாலே பொதுமய்யா


கு
மே 28, 2024 20:37

Total ஆம் ஆத்மி ஃப்ராடு


Ramesh Sargam
மே 28, 2024 20:09

ஒட்டுமொத்த ஆம்ஆத்மி கட்சியினரும் பெரிய ஊழல்வாதிகள், தில்லாலங்கடிகள்தான் போல..


மேலும் செய்திகள்







புதிய வீடியோ