உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விபத்துகள் நடக்கும் சாலைகளில் நடை மேம்பாலம் கட்ட திட்டம்

விபத்துகள் நடக்கும் சாலைகளில் நடை மேம்பாலம் கட்ட திட்டம்

பெங்களூரு: அதிக விபத்துகள் நடக்கும் சாலைகளில் நடை மேம்பாலங்கள் கட்ட, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி தொழில்நுட்ப பிரிவு பொறியாளர்கள் கூறியதாவது:நகரில் அதிகமான விபத்துகள் நடக்கும் இடங்களில், நடைமேம்பாலங்கள் கட்ட வேண்டும் என, போக்குவரத்து போலீசார் ஆலோசனை கூறியுள்ளனர். இத்தகைய இடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இவற்றில் 'பிளாக் ஸ்பாட்' என, 11 பகுதிகளை அடையாளம் காட்டியுள்ளனர்.இங்கு சாலையை கடக்கும்போது, பாதசாரிகள் விபத்துக்குள்ளாகின்றனர். வாகன போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே இங்கு நடைமேம்பாலங்கள் கட்டும்படி, போக்குவரத்து போலீசார் அறிக்கை அளித்துள்ளனர்.இத்தகைய சாலைகளில் நடை மேம்பாலங்கள் கட்டுவதன் சாதக, பாதகங்கள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரம் டெண்டர் முடிவு செய்து, 90 நாட்களில் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்படும். அறிக்கை அளித்த பின், மாநகராட்சியின் நிதியில் நடைமேம்பாலம் கட்ட வேண்டுமா அல்லது அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில் கட்ட வேண்டுமா என்பது முடிவு செய்யப்படும்.டாங்க் பண்ட் சாலை, வெளி வட்ட சாலையின் சவுடேஸ்வரி சுரங்கப்பாதை அருகில், கைகொண்டனஹள்ளி ஜங்ஷன், துமகூரு சாலையின், ஆர்.எம்.சி. யார்டு அருகில், வெளிவட்ட சாலையின், என்.சி.சி. அடுக்குமாடி குடியிருப்பு அருகில், வெளிவட்ட சாலையின் பாக்மனே டெக்பார்க் அருகில், ஹூடி ஜங்ஷன், பழைய மெட்ராஸ் சாலையின், ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் எதிரில், பழைய மெட்ராஸ் சாலையின், கார்ல்டன் டவர் அருகில், மைசூரு சாலையின், பி.எச்.இ.எல். அருகில், சர்ஜாபுரா சாலையின் கிருபா நிதி கல்லுாரி அருகே ஆகிய இடங்களில் நடை மேம்பாலம் கட்ட ஆலோசிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ