விமான விபத்தில் உயிர் தப்பியவர் டிஸ்சார்ஜ்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத், 'ஏர் இந்தியா' விமான விபத்தில் உயிர் தப்பிய பயணி, மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அதே விபத்தில் இறந்த அவரது சகோதரரின் இறுதிச்சடங்கு டையூவில் நேற்று நடந்தது. இதில், அவர் பங்கேற்றார்.குஜராத்தின் ஆமதாபாதில் நடந்த 'ஏர் இந்தியா' விமான விபத்தில், 241 பேர் உயிரிழந்தனர். விமானம் மோதிய கல்லுாரி விடுதியில் மருத்துவ மாணவர்கள் ஐந்து பேர் உட்பட 29 பேர் பலியாகினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ngjadb6i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியான விஸ்வாஸ் குமார் ரமேஷ், 40, என்ற பயணி மட்டும் உயிர் தப்பினார்.விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து காயங்களுடன் தப்பி வந்த அவரை, மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் காரணமாக உடல்நலம் தேறிய விஸ்வாஸ் குமார், நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே, அதே விமான விபத்தில், உயிரிழந்த அவரது சகோதரர் அஜயின் உடல், மரபணு பரிசோதனை வாயிலாக நேற்று கண்டறியப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து, விஸ்வாஸ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், குஜராத்தில் உள்ள தங்கள் சொந்த ஊரான டையூவிற்கு அஜயின் உடலை நேற்று எடுத்துச் சென்று தகனம் செய்தனர். அங்கு நடந்த தன் சகோதரரின் இறுதிச்சடங்கில் விஸ்வாஸ் குமார் பங்கேற்றார்.