உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம்; பறவை மோதியதால் அவசர தரையிறக்கம்!

4 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம்; பறவை மோதியதால் அவசர தரையிறக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: 4 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் மீது கழுகு மோதியதால், ராஞ்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியின் பிர்சா முண்டா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் கழுகு ஒன்று மோதியது. இதையடுத்து, விமானத்தை ராஞ்சியில் விமானி அவசரமாக தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த, பயணிகள் 175 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.ராஞ்சி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கும் போது, பயணிகள் 175 பேர் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ராஞ்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.பாட்னாவிலிருந்து வந்து கொண்டிருந்த விமானத்தில், கழுகு மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜூன் 03, 2025 04:13

கருத்து போடுபவர்கள் பொது அறிவு புல்லரிக்க வைக்கிறது...


Nada Rajan
ஜூன் 02, 2025 22:14

கழுகிற்கு ரொம்ப தான் தைரியம்.. 175 பேரை பீதியடைய வைத்து விட்டது


Karthik
ஜூன் 02, 2025 22:12

4000 அடி உயரத்தில் பறந்ததா..?? வியப்பாக உள்ளது.


மீனவ நண்பன்
ஜூன் 02, 2025 22:43

வழக்கமா 30000 அடி உயரத்தில் பறக்கும் ..உங்களுக்கு என்ன வியப்பு ?


புதிய வீடியோ