எல்லை தாண்டி வந்ததாக கூறி வீரர் கைது
புதுடில்லி : நம் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில், கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் பி.கே.சிங். இவர் பஞ்சாபின் பெரோஸ்பூரில், இந்திய - பாக்., எல்லையில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, தவறுதலாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜலோக் தோனா பகுதிக்குச் சென்று இளைப்பாறியதாகக் கூறப்படுகிறது. அதை நோட்டமிட்ட பாகிஸ்தான் வீரர்கள், சிங் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அவரை நேற்று கைது செய்தனர். அவரை மீட்கும் பணியில் நம் ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.