உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் பலி

கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் பலி

பாலக்காடு: பாலக்காடு அருகே, கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் உயிரிழந்தார். கேரள மாநிலம், பாலக்காடு, கல்லேக்குளங்கரை பகுதியை சேர்ந்த பிளம்பர் சுஜீந்திரன், 53. இவர் நேற்று காலை ரயில்வே காலனி உம்மினி பகுதியிலுள்ள தனியார் ஷாப்பிங் காம்ப்ளக்சில் கழிவுநீர் தொட்டியை அடைத்து, குழாய் சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, கால் தவறி கழிவுநீர் தொட்டியினுள் விழுந்தார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஹேமாம்பிகா போலீசாரும், தீயணைப்பு படையினரும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 23, 2025 13:01

இந்தியா விண்ணில் ராக்கெட் விட்டு சாதித்தால் மட்டும் போதாது. இதுபோன்ற மனிதன் கழிவுத்தொட்டியை சுத்தப்படுத்தும் முறையை ஒழித்து, இயந்திரங்கள் மூலமாக அவைகளை சுத்தம் செய்யும் வழியை கண்டறியவேண்டும் உயிர் பலியை தடுக்கவேண்டும். பரிதாப மரணமடைந்த பிளம்பர் ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி.


நிக்கோல்தாம்சன்
ஆக 23, 2025 12:21

இன்னமும் பழங்கால முறையிலேயே மனிதர்களை அடிமைப்படுத்தும் முகலாயர் கால முறைகளிலேயே வாழகிறோமா ?


சமீபத்திய செய்தி