உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமணம் செய்ய மறுத்ததால் ப்ளஸ் - 2 மாணவி சுட்டுக்கொலை

திருமணம் செய்ய மறுத்ததால் ப்ளஸ் - 2 மாணவி சுட்டுக்கொலை

பாட்னா:பீஹாரில் திருமணம் செய்ய மறுத்த ப்ளஸ் - 2 மாணவியை பள்ளிக்கு செல்லும் வழியில் இளைஞர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள கைய்சியா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் சுமன் குமாரி, 19. இவர் புசா ரோடு பகுதியில் உள்ள கஸ்துார்பா வித்யாலயாவில் ப்ளஸ் - 2 படித்து வந்தார். காலை பள்ளிக்கு அவர் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இளைஞர் சுமன் குமாரியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்த குமாரியை அவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் கழுத்து மற்றும் மார்பில் தலா இரு குண்டுகள் பாய்ந்ததில் சுமன் குமாரி உயிரிழந்தார். இதையடுத்து அந்த இளைஞர் தப்பியோடினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தாய் சங்கீதா தேவிடம் விசாரித்தனர். அப்போது, ''குப்தா என்ற இளைஞர் திருமணம் செய்து கொள்ளும்படி என் மகளை ஐந்து மாதங்களாக வற்புறுத்தி வந்தார். என் மகள் மறுத்ததை அடுத்து கொன்று விடுவதாக மிரட்டி வந்த குப்தா, பள்ளி செல்லும் வழியில் துப்பாக்கியால் சுட்டுகொலை செய்துள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

P.M.N.KRISHNAN
ஜூலை 21, 2026 09:19

- ஒரு தவறை இன்னொரு தவறால் நியாயப் படுத்துவதாக ஆகிவிடும்.


R.RAMACHANDRAN
ஜூலை 21, 2026 06:50

காட்டாட்சி நடப்பதன் விளைவு இது.


Priyan Vadanad
ஜூலை 21, 2026 05:33

தமிழ்நாட்டை இழிவுபடுத்தி பதிவிட வருபவர்களுக்கு இந்த பீகார் சம்பவம் இன்னும் கண்ணில் படவில்லையா.


ராஜா
ஜூலை 21, 2026 09:22

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பச்சிளம் குழந்தைகள் பாலில் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்தது நினைவில்லையா?


P.M.N.KRISHNAN
ஜூலை 21, 2026 09:23

கண்ணில் படுவதால், இங்கு நடப்பவற்றை நியாயப்படுத்துமாறு சொல்ல வருகிறீர்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை