உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி குண்டுவெடிப்பு சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: பிரதமர் மோடி உறுதி

டில்லி குண்டுவெடிப்பு சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, இந்த சதிக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம்( நவ.,10) காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்து லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் (எல்என்ஜேபி) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1u0k492w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, இன்று மதியம் டில்லி திரும்பினார். உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற அவர், குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

சட்டத்தின் முன்பு

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எல்என்ஜேபி மருத்துவமனைக்கு சென்று, கார் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை சந்தித்தேன். அவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இந்த சதிக்கு பின்னால் உள்ளவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். https://x.com/narramodi/status/1988541418915172514


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 12, 2025 19:08

சாதாரண சட்டங்கள் தீவிரவாத ஒழிப்புக்கு உதவா .....


V RAMASWAMY
நவ 12, 2025 18:23

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்குள் அவர்களுக்கு வயதாகிவிடும், அதற்குள் அவர்களின் வெவ்வேறு பரிமாணங்கள் தலை தூக்கிவிடும். சிங்கப்பூர், சவூதி அரேபியாவில் உள்ளது போல் தண்டனை உடனுக்குடன் கடுமையாக நிறைவேற்றவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை