உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

புதுடில்லி: காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இன்று (ஜூன்9) இரவு 7 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் அவர் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். காலை ராஜ்காட் சென்ற பிரதமர் அங்குள்ள காந்தி, வாஜ்பாய், போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக முப்படை வீரர்கள் மூத்த அதிகாரிகள் மோடியை வரவேற்றனர். இவருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sockalingam manickam
ஜூன் 09, 2024 10:30

உயர்திரு லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கலாம்.


இவன்
ஜூன் 09, 2024 10:11

கொத்தடிமைஸ் எவளோ கதறுனாலும் ?? மோடி 3.0


கனோஜ் ஆங்ரே
ஜூன் 09, 2024 12:07

மண்டைய மறைச்சா பத்தாது... கொண்டையையும் மறைக்கத் தெரியலையே...


ஜானி
ஜூன் 09, 2024 09:54

முதல்ல அத்வானி கிட்டே போய் மன்னிப்பு கேட்டு ஆசீர்வாதம் வாங்குங்க. மூத்தார் சாபம் சும்மா உடாது.


r ravichandran
ஜூன் 09, 2024 10:59

கண்களை மூடி கொண்டு இருக்காமல் திறந்து பாருங்கள். 2014, 2019, 2024 தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதலில் சென்று வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அவர்களின் வீட்டிற்கு சென்று மோடி ஆசி வாங்கி விடுவார். இம்முறையும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அவர்களின் ஆசியை பெற்ற காட்சிகளை தொலை காட்சிகள் ஒளி பரப்பியது.


காத்தவராயன்
ஜூன் 09, 2024 09:53

வாஜ்பாயி இருந்தா தலையில அடிச்சிக்குட்டு கூட்டணி ஆட்சி வாணாம்னு சொல்லுவார்.


RAJ
ஜூன் 09, 2024 09:52

வாழ்த்துக்கள் மோடி ஜி. கலக்குங்கள் இந்த முறை. எதிரிகளின் எண்ணங்களை தவிடு பொடி ஆக்குங்கள்..


கனோஜ் ஆங்ரே
ஜூன் 09, 2024 12:10

“தாவுடா, தாவு...”..ன்னு முரளி சொன்னதும்... வடிவேல் “எங்க தாவுறது, நானே தவழ்ந்துட்டிருக்கேன்”...ங்ற வடிவேல்-முரளி காமெடி வசனம்தான் இதுக்கு பதில் ////எதிரிகளின் எண்ணங்களை தவிடு பொடி ஆக்குங்கள்..//// எங்க தவிடுபொடி ஆக்குறது... இவர்தான் நித்தீஷ் மற்றும் சந்திரபாயுநாயுடு கம்பெனிகளால், தவிடுபொடியாகப் போகிறார்...


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 09, 2024 09:47

வாஜ்பாய் நினைவிடத்துக்கு மரியாதை ..... ஓகே .....


Rpalnivelu
ஜூன் 09, 2024 09:42

கண்டு கொள்வதில்லை போல. தேசத்தை விற்றவர்களுக்கு என்றுமே மரியாதை தேவையில்ல


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை