உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி பிஎம் கிசான் நிதி: ஆகஸ்ட் 2ல் வழங்குகிறார் மோடி

விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி பிஎம் கிசான் நிதி: ஆகஸ்ட் 2ல் வழங்குகிறார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் ஆக., 2ம் தேதி 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி பிரதமர் கிசான் நிதியை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகள், ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணைகளில் பெறுகிறார்கள். இது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.சாகுபடி நிலங்களை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். அடுத்த கட்ட தவணை ஆகஸ்ட் இரண்டாம் தேதி விடுவிக்கப்பட உள்ளது.இது குறித்து வேளாண் அமைச்சகம் அறிக்கை: நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில், ஆகஸ்ட் 2ம் தேதி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து ரூ.20,500 கோடி மதிப்புள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 20வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கிறார்.மத்திய அரசின் முதன்மை நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் 2019ல் தொடங்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..இதுவரை, திட்டத்தின் கீழ் 19 தவணைகளாக ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.பிரதமர் தனது தொகுதியான வாரணாசியில் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு நிகழ்ச்சியின் போது இந்தத் தவணை விநியோகத்தை தொடங்குவார். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் புதுடில்லியில் உள்ள கிருஷி பவனில் ஒரு ஆயத்தக் கூட்டத்தை நடத்தினார். இவ்வாறு வேளாண் அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kannanc Kannanc
ஆக 01, 2025 22:04

Nalla iruku... nalvaazthukkal


M Ramachandran
ஜூலை 30, 2025 22:24

நான் ஸ்டாலின் அப்பா எனக்கு அப்பா கருணாநிதி என்று சொல்லி கொள்கிறார்கள். என்னைய்ய உச்சி முகர்ந்து ஆசையாய் உதவி முதல்வர் பதவியில் குடும்ப வாரிசாக பட்டமளித்தார். அவருக்கு நன்றி கடனாக கண்ட இடங்களில் கஜானா பணத்தால் சிலையை நிறுவி நன்றி கடன் செலுத்துகிறேன். ஆகையால் நிதி என்று அவர் பெயரிலிருப்பதால் எல்லா நிதிகளும் எங்களுக்கென சொந்தம். ஆகையால் மத்திய ஒன்றிய அரசை இந்த குன்றிய அரசு கேட்டு கொள்கிறது. விவசாயிகளுக்கு ஏதோ நாங்க இயன்ற தர்மத்தினை எங்க குடும்ப மாப்பிள்ளைகள் குஞ்சு குளுவான்களுக்கு போக மீதி இருந்தால் நாங்க உதவி செய்வாதாக மேடை ஒளி பெருக்கி மூலம் விளம்பரமாக போட்டு செய்யவோம்


venugopal s
ஜூலை 30, 2025 20:17

ஆமாம், அவர் உழைத்து சம்பாதித்த சொந்தப் பணத்தை வழங்கப் போகிறார்!


vivek
ஜூலை 31, 2025 07:41

உனக்கு யாரு சோறு போடுறாங்க... வேலைக்கு போறியா


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 30, 2025 19:08

நான் ஒரு குறு விவசாயி. என்னை விஏஓ அலுவலகத்திலிருந்து அவர்களே அழைத்து பதிவு செய்தார்கள். முதலில் எதற்காக பதிவு செய்கிறார்கள் என்றுகூட எனக்கு தெரியவில்லை. பின்னர் தொண்டாமுத்தூர் விவசாய அலுவலகத்தில் இருந்து அழைத்து பதிவுகளை சரி பார்த்தார்கள். அவர்கள்தான் எனக்கு ஆண்டுக்கு ₹6,000 வரும் என்ற விபரத்தை சொன்னார்கள். இன்றுவரை தொடர்ந்து பணம் வந்துகொண்டு இருக்கிறது.


அசோகன்
ஜூலை 30, 2025 17:07

ஊ பி குத்தான் அறிவாலயம் கொடுக்குதே....... இனி ஸ்டிக்கற திராவிசயத்துகிட்ட வாங்கி ஒட்டு


என்றும் இந்தியன்
ஜூலை 30, 2025 16:47

ரூ 61,500 கோடி ஒரு வருடத்தில் விவசாயிகளுக்கு இலவசம் என்ற பெயரில்???இதன் அவசியம் என்ன???


vivek
ஜூலை 30, 2025 17:53

என்றும் கொத்தடிமை.. .இந்த பெயர் உனக்கு சரியாக இருக்கும்


அப்பாவி
ஜூலை 30, 2025 16:14

விவசாயி வருமானம் ட்ரிப்பிள் ஆயிருச்சு..


vivek
ஜூலை 30, 2025 17:52

அவன் உழைகிறான்...உன்னை போல வேலைக்கு போகாம வெட்டி கருத்து போடல அப்புசாமி


Manaimaran
ஜூலை 30, 2025 15:27

10 காசு கூட வந்ததில்ல


vivek
ஜூலை 30, 2025 16:59

காசு வந்தவுடன் டாஸ்மாக்கை நோக்கி ஓடிடுவ......


சமீபத்திய செய்தி