உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய - சீன எல்லையில் அமைதி: அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்திப்புக்கு பிறகு மோடி பேச்சு

இந்திய - சீன எல்லையில் அமைதி: அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்திப்புக்கு பிறகு மோடி பேச்சு

பீஜிங்: இந்திய- சீன எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றதால் அமைதி ஏற்பட்டுள்ளது என அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி தெரிவித்தார்.ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஏழு ஆண்டுகளுக்கு பின் நேற்று சீனா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அங்குள்ள ஹோட்டலுக்கு சென்ற பிரதமரை வரவேற்கும் விதமாக, இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pb9upwbq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது, சீனாவின் தியான்ஜின் நகரில் 2 நாட்கள் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டுக்கு முன்னதாக, சீனஅதிபர் ஜி ஜின்பிங்யை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். கடந்த 2020ல், ஜம்மு - காஷ்மீரின் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, இருநாட்டு உறவும் பாதிக்கப்பட்டது.பல கட்ட பேச்சைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் இருநாட்டு வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபடலாம் என கடந்தாண்டு முடிவு செய்யப்பட்டதை அடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி இன்று பேச்சு நடத்தினார்.எல்லைப் பிரச்னையில் சுமுக முடிவு காண இருவரும் ஆலோசனை நடத்தியதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.முன்னதாக 2024ம் ஆண்டு ரஷ்யாவின் கசானில் நடந்த பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் அமைதி

பின்னர் பிரதமர் மோடி கூறியதாவது: இந்திய- சீன எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றதால் அங்கு அமைதி, உறுதிநிலை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தியா- சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவு மனிதகுலத்தின் நலனுக்கு வழிவகுக்கும். மேலும் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என உறுதிபூண்டுள்ளோம். இருநாட்டு உறவால 280 கோடி பேருக்கு பலன் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மிக முக்கியம்

சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாவது: சீனாவும், இந்தியாவும் பழம் பெரும் நாகரிகம் கொண்ட நாடுகள். நாங்கள் உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். இந்தியா-சீனா ஆகிய இரண்டு நாடுகளும் நல்ல அண்டை நாடாகவும், நண்பர்களாகவும் ஒன்றிணைவது மிக முக்கியம். இவ்வாறு ஜி ஜின் பிங் கூறினார்.

தியான்ஜின் ஏன்?

தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டை அங்கு நடத்துவது ஏன் என பலருக்கும் கேள்வி எழுந்தது. பீஜிங் தலைநகராக இருக்கும் போதும், எஸ்சிஒ அமைப்பு ஷாங்காய் நகரில் தான் பிறந்தது. ஆனால், இந்த மாநாட்டை தியான்ஜின் நகரில் கூட்டுவது ஏன் என பலரும் கேள்விகளை எழுப்பத் துவங்கினர். இதற்கான விடை, வரலாற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதன்படி, ஒரு காலத்தில் இந்த நகரம் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்பில் இருந்தது. பல பகுதிகளை வெளிநாட்டினர் நிர்வகித்து வந்தனர். சீனாவுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் இருந்தது. ஆனால், வெளிநாட்டினரின் பிடியில் இருந்த தெருக்கள் அனைத்தும், சீனர்களின் கைகளுக்குள் வந்துள்ளது. வெளிநாட்டினரின் கட்டடங்கள் அனைத்தும் சீன கபேக்களாகவும், கடைகளாகவும் மாறியுள்ளன. இங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டை நடத்துவதன் மூலம், உலகிற்கு ஒரு செய்தியை அனுப்ப சீனா விரும்புகிறது. ஒரு காலத்தின் வெளிநாட்டினரின் பிடியில் இருந்த நகரம், தற்போது மேற்கத்திய நாடுகளின் உலக வரிசைக்கு எதிராக சவால் விடும் மேடையாக பயன்படுத்துகிறோம் என்பதே அந்தச் செய்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Yasararafath
ஆக 31, 2025 19:43

இந்த அமைதி தொடர்ந்து நீடிக்குமா?


அப்பாவி
ஆக 31, 2025 19:03

சும்மாவா? 20 முறை சாப்புட்டு பேசியிருக்கோமே...


Asagh busagh
ஆக 31, 2025 16:49

1950களில் PRC கமியுனிஸ்ட் சீனாவை முதலில் அங்கீகரித்தது, ஐநா உறுப்பினராக அமெரிக்க எதிர்ப்பை மீறி ஆதரித்தது ஏமாந்தது நேருவும் தொலை நோக்கு பார்வையில்லாத காங்கிரஸ் கட்சியும். அவனுங்க இந்தியாவை வளர விடவே மாட்டானுங்க. Strategically பட்டை நாம்ம் போட்டு ஓஸியில் கிடைத்த அட்வாண்டேஜை சீனா விட்டு கொடுக்கவே வாய்ப்பு இல்லை. செலவு அதிகம் இல்லாம இந்தியாவ அடக்க வைக்க பாகிஸ்தானை பயன்படுத்துரானுங்க. அமெரிக்கா நம்பகதன்மை இல்லாமல் இருந்தாலும் அவ்கே ஆட்சி மாறும் போது காட்சிகள் மாறும். இந்திய வம்சாவளியினர் பலரும் லாபி செய்ய முடியும். ட்ரம்ப் மாதிரி ஊழல்வாதியை குறைந்த பட்சம் விலைக்கு வாங்க வாய்ப்புண்டு. கமியுனிஸ்ட் சீனாகிட்ட காட்சி மாற வாய்ப்பே இல்லை. மறுபடியும் வரலாற்று பிழையை மோடி செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 31, 2025 15:44

இனிமேல்தான் இருக்கிறது நம்ம ஊர் கம்யூனிஸ்டுகளின் திண்டாட்டம். பாஜக சீனாவுடன் நட்புக்கொண்டால் கம்யூனிஸ்டுகள் யாரை எதிர்ப்பார்கள்? யாரை எதிர்த்து கட்டுரை எழுதுவார்கள்? நம்ம முதல்வர் இனி ரஷ்யா, சீனாவிற்கு சென்று அந்நிய முதலீடுகளை சீன, ரஷ்ய மொழிகளில் பேசி ஈர்ப்பாரா? நந்தன் கம்யூனிஸ்ட் ஸ்டாலின் என்று அங்கு போய் சொன்னால் டங்குவார் அருந்துவிடும்.


அப்பாவி
ஆக 31, 2025 14:46

இப்போ திரும்ப அதே பேச்சு...


Kumar Kumzi
ஆக 31, 2025 14:59

இதோ வந்துட்டான்ல ...


Chanakyan
ஆக 31, 2025 14:16

நேற்று வரை நம்பகமான கூட்டாளியாக இருந்த அமெரிக்கா இன்று கழுத்தறுத்து விட்டது. யாரையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய ஆட்சியாளர்கள் வற்புறுத்தியதில்லை. ஆனாலும் கூடுதல் வரிகளால் வியாபாரம் பாதிக்கப்படும்போது சரி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திற்கு உள்ளது. உலகத்தின் முதன்மை பொருளாதார நாடான அமெரிக்கா கைவிடும் போது மாற்று ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இரண்டாம் சக்தியான சீனாவுடன் நல்லுணர்வை புதுப்பிப்பது முக்கியம். தேச நலனில் அக்கரை கொண்ட யாராக இருந்தாலும் இதைத் தான் செய்வர். நாடு எக்கேடு கெட்டால் என்ன? மோடியை பழிப்பதற்கு இது ஒரு வாய்ப்பு என்று நினைப்பவர்கள் இயல்பாகவே எதிர்மறையாகத் தான் விமர்சிப்பர்.


Rathna
ஆக 31, 2025 13:57

இந்திய சீனனையும், அமெரிக்கனையும் ஒரு தூரத்தில் வைத்து பார்க்க வேண்டும். உதாரணமாக கூகுளை எதிர்க்கும் ஒரு இந்திய நிறுவனம் இந்தியாவில் இல்லை. X வலைத்தளத்தை எதிர்க்கும் ஒரு இந்திய நிறுவனம் இந்தியாவில் இல்லை. கூ என்ற நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவங்களை எதிர்க்கும் ஒரு இந்திய நிறுவனம் இந்தியாவில் இல்லை. கோகோ கோலா, பெப்சி போன்ற நிறுவங்களை எதிர்க்கும் ஒரு இந்திய நிறுவனம் இந்தியாவில் இல்லை. face book, இன்ஸ்டாகிராம், வாட்ஸப் போன்ற நிறுவங்களை எதிர்க்கும் ஒரு இந்திய நிறுவனம் இந்தியாவில் இல்லை. இது மாதிரி நிறுவனங்களை இந்தியாவில் நிறுவ மோடி ஒத்துழைக்க வேண்டும். அதற்கான அரசு உதவிகளை செய்ய வேண்டும். இந்த மாதிரி நிறுவனங்களை தென் கொரியா, சீனா, ஜப்பான். ரஷ்யா போன்ற நாடுகள் உள்நாட்டில் உருவாக்கி வெற்றி கண்டுள்ளன. இதை செய்தால் அமெரிக்க பெரியண்ணன் மிரட்டும் போது நாமும் இந்த நிறுவனங்கள் மூலம் மிரட்டலாம். இது தான் இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.


Barakat Ali
ஆக 31, 2025 13:48

திமுக, காங்கிரஸ் கொத்தடிமைகள் இதை விரும்பவில்லை.... சீன கம்யூனிஸ்ட்டு கட்சியுடன் ஒப்பந்தமே போட்ட பப்புவுக்கு ரொம்பவே எரிச்சலாக இருக்கும் ....


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 31, 2025 13:16

நேருக்கு நேர் நிற்கும் எதிரியுடன் சண்டை போடலாம், சமாதானம் பேசலாம். ஆனால் முதுகில் குத்தும் துரோகிகளுடன் சண்டை போடும்போதும், சமாதானம் பேசும்போதும் அளவிற்கு அதிகமான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நண்பர்களும், துரோகிகளும், எதிரிகளும் மாறிக்கொண்டே இருப்பர், ஆனால் அண்டை நாடுகள் மாறாது. அண்டை நாட்டினர் நண்பர்களாக, துரோகிகளாக, சுயநலம் மிக்கவர்களாக, பொறாமை கொண்டவர்களாக, கூட இருந்தே குழி பறிப்பவர்களாக, முதுகில் குத்துபவர்களாக, விரோதிகளாக காலத்திற்கேற்ப, ஆளுபவர்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பார்கள். நாம்தான் எப்போதும் எச்சரிக்கையுடனான நட்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.


T.sthivinayagam
ஆக 31, 2025 12:36

சீனா பற்றி பேசியர்களை தேசவிரோதிகள் என்று பேசிய தாமரை குட்டை தவளைகள் இப்போது எங்கே என்று மக்கள் கேட்கிறார்கள்


vivek
ஆக 31, 2025 13:03

சீனாவிடம் கைக்கூலி வாங்கியவர்கள் எங்கே ஓடினார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்


vivek
ஆக 31, 2025 13:05

அமைதி ஏற்பட்டால் திராவிட கும்பலுக்கு பிடிக்காது என்று மக்கள் கூறுகின்றனர்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 31, 2025 13:06

இப்போதும் இந்தியா அதே எண்ணத்தில்தான் இருக்கிறது. டிரஸ்ட் பட் வெரிஃபை என்ற நிலைப்பாடுதான் சர்வதேச உறவுகளில் சரியானதாக இருக்கும்.


Kumar Kumzi
ஆக 31, 2025 15:07

திராவிஷத்துக்கு முட்டு குடுக்கும் ஓசிகோட்டர் கொத்தடிமைகள் இந்திய அழிவில் தான் சந்டதோஷப்படுவான் ஆமா பேரு வித்தியாசமா இருக்கே ஹீஹீஹீ


முக்கிய வீடியோ