உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இயற்கை பேரிடர்களால் பேரழிவு: மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி வேதனை

இயற்கை பேரிடர்களால் பேரழிவு: மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் பேரழிவு ஏற்பட்டது பற்றி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவைப் பாதுகாப்பதில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களின் நேர்மையையும் செயல்திறனையும், நாட்டிற்க்காக செய்ததையும் நான் நினைவு கூர்கிறேன். யுபிஎஸ்சி போன்ற கடினமான தேர்வுகளின் தகுதிப் பட்டியலில் பெயர் இடம்பெறாத மாணவர்களுக்காக, 'பிரதிபா சேது' என்னும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திறமையான இளைஞர்களின் தரவு வங்கி உள்ளது. இதை அரசு துறையினர், தனியார் துறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yzk8tgj3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இரண்டு சாதனைகள்

வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழை பெய்த போதும் ஜம்மு காஷ்மீர் இரண்டு சிறப்புமிக்க சாதனைகளை படைத்துள்ளது. புல்வாமாவில் நடந்த முதல் பகல்- இரவு கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான மக்கள் திரண்டு சாதனை படைத்துள்ளனர். இரண்டாவது சாதனை ஸ்ரீநகரில் நடந்த முதல் கேலோ இந்தியா நீர் விளையாட்டு போட்டிகள். காஷ்மீரில் நீர் விளையாட்டுகளை பிரபலப்படுத்தும் வகையில் கேலோ இந்தியா நீர் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதில் இருந்து 800க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றனர்.

இயற்கை பேரிடர்

மழைக்காலத்தில் இயற்கை பேரழிவுகள் நாட்டை சோதிக்கின்றன. கடந்த சில வாரங்களாக வெள்ளம், நிலச்சரிவுகளில் ஏற்பட்ட பெரும் அழிவை நாம் கண்டிருக்கிறோம். இந்த சம்பவங்கள் ஒவ்வொரு இந்தியனையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. எங்கே எல்லாம் இயற்கை பேரிடரால் பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கு மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மக்களை மீட்டனர். நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே பாரதம் உயர்ந்த பாரதம் என்ற உணர்வு மிகவும் முக்கியமானது.

ஒற்றுமை

இன்று நாட்டின் பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான சோலார் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நமது தச்சர்கள், கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள் எப்போதும் இந்தியாவின் செழிப்புக்கு அடித்தளமாக இருந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

வரும் நாட்களில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கிறது. இத்தாலியில் வால்மீகி சிலை, கனடாவில் 51 அடி உயர ராமர் சிலை, ரஷ்யாவில் குழந்தைகள் வரைந்த இராமாயண ஓவியங்கள் இந்திய கலாசாரத்தின் பரவலைக் காட்டுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவை நாடே கொண்டாடி வரும் இந்த நேரத்தில், நாம் சுதேசி பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். உள்ளூர் மக்களுக்கான குரல், வளர்ந்த இந்தியா என்பதே நம் இலக்கு. விழாக்களில் தூய்மையை மறக்காதீர்கள், தூய்மையுள்ள இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று முழு உலகத்தின் கவனமும் இந்தியாவை நோக்கி திரும்பி உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றுமை மிக முக்கியமானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Tamilan
ஆக 31, 2025 22:00

மும்மாரி பொழியும் என அக்கால இந்துமதவாத மன்னர்கள் சிற்பிகள் கதை விட்டார்களா ? அல்லது மோடியை அரக்கன் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களா ?


Narayanan Muthu
ஆக 31, 2025 20:20

உங்கள் ஆட்சி மக்களுக்கு ஏற்படுத்திய பேரழிவையும் சற்றே கவனத்தில் கொள்ளவும்.


முதல் தமிழன்
ஆக 31, 2025 16:37

நீங்க கவலைப்பட்டு உடல் நலத்தை கெடுத்து கொள்ளாதீர்கள்.


Narayanan Muthu
ஆக 31, 2025 20:17

தரமான கருத்து


GMM
ஆக 31, 2025 13:57

மழைக்காலத்தில் இயற்கை பேரழிவுகள். காரணம் காடுகள் அழிப்பு. பராமரிக்க முடியாமல் பயன்படுத்த தெரியாதவரிடம் காலி நிலம். மாநிலங்களிடம் நில, நீர், பராமரிப்பு பொறுப்பு கொடுத்தது. நாடு முழுவதும் அதிக அளவு ஆடு, மாடு உணவிற்கு பயன்படுத்தும் முறை. பகட்டுக்கு தனி வாகன உபயோகம். ஒரு ஆண்டு நாடு முழுவதும் காடு அழிப்பு, ஆடு மாடுகள் வதையை தடுத்து பாருங்கள். சீற்றம் நிற்கும். நமது தச்சர்கள், கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள் இந்தியாவின் செழிப்புக்கு அடித்தளம். நெசவாளர்கள்? நல்ல வேளை, குல தொழில், குல தெய்வம் விரும்பாத சர்வாதிகாரி வெளிநாட்டில். பேரழிவு மூலம் நாட்டின் செல்வ வளம் குறையும்.


Premanathan S
ஆக 31, 2025 13:52

முதலைக் கண்ணீர் உள்நாட்டுக்கு பிரச்சினைகளை தீர்க்க வேலை செய்யாமல் வெளிநாடுகளில் அவார்டு வாங்க அலைவது தற்போது நம் தலைவர்களிடம் fashion ஆகி வருகிறது மாநிலமும் அப்படித்தான் மத்தியிலும் அப்படிதான் இதில் ஏழையை நினைக்க எங்கே நேரம் இருக்கிறது? வாழிய செந்தமிழ் வாழிய பாரத மணித்திருநாடு


Ashanmugam
ஆக 31, 2025 13:22

உலகத்தில் நடக்கும் இயற்கையின் சீற்றால் இயற்கை வளமும், மனித உயிர்களை எண்ணி வேதனை படுகிறார். இதற்கு எல்லாம் காரணம் உலக தலைவர்களே. அவர்களின் அதிகார பதவி மமதையில் குண்டு போட்டு மாகாணத்தை ஆக்கிரமிக்கும் வெறியுடன் மற்றும் இன மத மொழி வெறியுடன் சண்டையிட்டு அழிப்பதால் இறைவன் உலகத்திற்கே எம்பெருமான் இயற்கை பேரழிவு மூலம் தண்டணை வழங்குகிறார். அமெரிக்க அதிபர் அதிகார திமிரால் மிதமிஞ்சிய வரியை சுமத்தி உலக மக்களை வாட்டி வதைக்கிறார். அதேபோல இந்தியாவில் பாரத பிரதமர் மோடிஜி ஜிஎஸ்டி வரி சுமத்தி ஏழை எளிய பாமர நடுத்தர அடிதளத்து நடுத்தர மக்களை வாழ்வாதாரத்திற்கு முட்டு கட்டை போடுகிறார். நீங்க 300ரூ பிள்ளைகளுக்கு ஸ்னாக்ஸ்&savouries வாங்கினால் ஜிஎஸ்டி வரி. இதே காங்கிரஸ் ஆட்சியில் இந்த வரிகொடுமை கிடையாது. ஏழை எளிய பாமர நடுத்தர அடிதளத்து குழந்தைகள் மாலை நேர பள்ளி முடித்தவுடன் ஸ்னாக்ஸ்&சாவொரிஸ் இப்போ விதிக்கும் ஜிஎஸ்டி ரூ48 ல் வாங்கி சாப்பிட முடிந்தது. அந்த நிலமை இப்போ பணக்கார பிள்ளைகள் அனுபவிக்கின்றனர்? ஆக, பிஜேபி ஆட்சி ஓட்டு திருட்டு வழக்கில் நிருபித்து கூடிய விரைவில் ஒழிய எல்லாம் வல்ல சிவபெருமானை கண்ணீர் மல்க வேண்டுகிறேன். சிவ சிவ சிவாய நமக. திருச்சிற்றம்பலம்.


Kannan
ஆக 31, 2025 13:45

காங்கிரஸ் திருடி திண்ணதை மோடி பில் போட்டு கட்டச் சொல்லுறாரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை