உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிராயசித்தம் தேடி பிரதமர் மோடி தியானம் : கபில் சிபல் விமர்சனம்

பிராயசித்தம் தேடி பிரதமர் மோடி தியானம் : கபில் சிபல் விமர்சனம்

சண்டிகர் : கன்னியாகுமரியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று தியானம் செய்வதாக அறிவித்திருப்பதன் வாயிலாக, அவர் பிராயசித்தம் செய்ய உள்ளார் என ராஜ்யசபா எம்.பி., கபில் சிபல் விமர்சித்துள்ளார். லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்தபின் பிரதமர் மோடி, இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார். அங்கு, கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் வரும் ஜூன் 1ம் தேதி மாலை வரை தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக ராஜ்ய சபா எம்.பி., கபில் சிபல் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ., எந்த சாதனைகளும் செய்யவில்லை. எனவே, தான் பா.ஜ., தலைவர்கள் தங்கள் பிரசாரங்களில் தாலி, ஓட்டு ஜிஹாத், முஜ்ரா பாரம்பரிய நடனம் போன்ற விவகாரங்களையும், எதிர்க்கட்சியினரையும் விமர்சித்து வருகின்றனர். ஆட்சிக்கு வரும் முன் பிரதமர் மோடி, 60 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் செய்யாததை தாங்கள் 60 மாதங்களில் செய்வோம் எனவும், புதிய இந்தியா அமைப்போம் எனவும் குறிப்பிட்டார். ஆனால், 120 மாதங்கள் ஆட்சி செய்தும் புதிய இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். நம் நாட்டு மக்கள், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பல்வேறு நாடுகளில் கல்விக்கு 9 முதல் 12 சதவீதம் வரை ஒதுக்கப்படுகிறது. நம் நாட்டில் அது, வெறும் 4 சதவீதம் மட்டுமே ஆட்சியாளர்கள் ஒதுக்குகின்றனர். இதுதவிர, 25 முதல் 30 வயதுடைய இளைஞர்கள் 46 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். இதற்கிடையே, பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள உள்ளார். இதற்கு எல்லாம் பிராயசித்தம் செய்யும் வகையில், அவர் இதை மேற்கொண்டால் நல்லது; அவ்வாறு இல்லை எனில் சுவாமி விவேகானந்தரின் எழுத்து மற்றும் பேச்சால் கவரப்பட்டு, தியானம் மேற்கொண்டாலும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

Nagarajan S
ஜூன் 02, 2024 20:28

யார் எதை பேசுவதென்ற வரை முறையே இல்லாமல் போய்விட்டது. கிரிமினல்களுக்கு வக்காலத்து வாங்கி கோடி,கோடியாக சம்பாதிக்கும் கட்சி மாறி வக்கீல்கள் தாங்கள் நியாய வாதிகள் போல பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது.


sethu
ஜூன் 02, 2024 09:26

காங்கிரசில் திமுக இரண்டிலும் அந்நிய மதம் வக்கீல்கள் நிறைந்து இருப்பது இதுக்குத்தான் மேலும் போலீஸ்துறை மற்றும் நீதித்துறை இவற்றில் பணியில் இருக்கும்போது செய்த பாவத்தின் பலன் இவர்களின் கடைசி கால இறப்பு மிக கொடூரமானதாக நாதி இல்லாத நடைப் பிணமாகத்தான் வாழ்ந்து சாகிறார்கள் .


S.Viswanathan
ஜூன் 01, 2024 11:41

காங்கிரஸ் கட்சி செய்த காரியங்களுக்கு அவர்களால் ப்ராயச்சித்தமே செய்ய முடியாதே


sankar
ஜூன் 01, 2024 10:15

தனது வாழ்நாளை அறிப்பணித்து - வாதாடும் கயவர்


Naagarazan Ramaswamy
மே 31, 2024 18:07

மோடி அவர்களின் தியானம் அவரது கட்சிக்கும் நாட்டுக்கும் வெற்றியை தரட்டும். நாமும் வேண்டுவோம்


Naagarazan Ramaswamy
மே 31, 2024 18:05

காங்கிரஸிலிருந்து விலகி ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வக்கீலாயிருக்கும் கபில் சிபல் ஒரு பக்கா வியாபாரி . மோடிக்கு எதிராக எந்த கேசிலிம் வாதாடுவார். பெட்டியில் பணமும் சேரும் . ஹிப்போகிறீட்


நிக்கோல்தாம்சன்
மே 31, 2024 05:41

உன்னுடைய கட்சி மாதிரி நாட்டினை வெளிநாட்டிற்கு காட்டி கொடுக்கும் வேலையை செய்யவில்லையே உங்களுக்கெல்லாம் திவசம் eppodaa?


s vinayak
மே 30, 2024 19:03

மாட்டு இறைச்சி வியாபாரிக்கு தியானம் பற்றி தெரிய ஞாயமில்லை


raja
மே 30, 2024 18:28

இருக்கட்டுமே.. உங்க மண்ணு பிராயச்சித்தமாக பொற்கோயிலுக்கு வந்த பக்தர்களின் காலணியை துடைத்ததை விட இது ஒன்றும் கேவலம் இல்லையே சிபிலு....


ram
மே 30, 2024 16:49

நீங்க செய்த பாவங்களுக்குன்னு வச்சுகிடலாமா..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை