உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனிய நண்பர், அற்புதமானவர்; விஜயகாந்தை புகழ்ந்த பிரதமர் மோடி

இனிய நண்பர், அற்புதமானவர்; விஜயகாந்தை புகழ்ந்த பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் என்று பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். 2026 தமிழக சட்டசபை தேர்தலை மையம் கொண்டு அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை ஆரம்பித்துள்ளன. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ukuth0h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. இப்படி ஒரு சூழலில் விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்று பிரதமர் அழைப்பார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று (ஏப்.14) கூறினார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.இந் நிலையில், பிரமேலதாவின் பதிவுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். தமது எக்ஸ் வலை தளத்தில் பிரேமலதாவின் பதிவை இணைத்து, விஜயகாந்தை புகழ்ந்துள்ளார். அவர் தனது பதிவை தமிழில் வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது; எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்.இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Oviya Vijay
ஏப் 15, 2025 06:59

விடலாம்... ஆனா ஏக்கர் கணக்குல அள்ளி விடக்கூடாது...


vivek
ஏப் 15, 2025 15:33

ஆர்டிஸ்ட்கு ஒரு சில் பீர் பார்சல்


Padmasridharan
ஏப் 15, 2025 05:54

நடிகர்கள் நிறைய பேர், நண்பர்களாக உள்ள கட்சி வெற்றி பெரும் என்று தெரிந்து நடத்துபவர்


Sivakumar
ஏப் 15, 2025 02:38

ஆமாங்க, விஜய் காந்தும், மோடி ஐயாவும் ஒண்ணா கோலி , கில்லி தண்டா எல்லாம் விளையாடினாங்க. அட நம்புங்கய்யா. எல்லாம் ஒரு 5-10 ஆயிரம் ஒட்டு படுத்தும் பாடு.


Oviya Vijay
ஏப் 15, 2025 00:54

அப்படியே புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமியின் அப்பா உங்கள் பள்ளி நண்பர் அப்படின்னு ஒரு பிட்ட போட்டு அதையும் உங்க கூட்டணிக்குள்ள இழுத்துகோங்க ஜீ... அதுக்கு அப்புறம் கருணாஸ்ஸோட தாத்தா உங்க அப்பாவோட நெருங்கிய சினேகிதர் அப்படின்னு சொன்னீங்கன்னா முக்குலத்தோர் புலிப்படை கட்சியும் உங்களோட வசம் ஆயிரும்... பிறகென்ன... எல்லாரும் சேர்ந்து கூட்டணி அமைச்சீங்கன்னா சும்மா ஜம்முன்னு 2026 தேர்தல்ல ஈஸியா தோத்துறலாம்ல... பிஜேபி மட்டும் தனிச்சு நின்னு போட்டி போட்டு தோத்தா தான் அசிங்கம்... கூட்டணியோட நின்னு தோத்தா அதோட காரணத்தை மத்த கட்சிகள் மேல போட்டுட்டு நீங்க எஸ்கேப் ஆயிரலாம் ஜீ...


vivek
ஏப் 15, 2025 06:15

பெண்கள் இதயம் போன்றவர்கள் என்று கூறிய மகா பொய்யை விட இது அதிகம் இல்லை ஓவியரு...போவியா


Priyan Vadanad
ஏப் 15, 2025 00:49

தாய்லாந்து முன்னாள் முதல்வர் ஒருவர், இன்னார் என் கனவில் வந்து பேசினார் என்று சொல்லி மாய்ந்து மகிழ்வார்.


kamal 00
ஏப் 15, 2025 06:24

சமாதிக்கு தயிர் வடை வைக்குறவனெல்லாம் பேசுறானுக


Easwar Kamal
ஏப் 15, 2025 00:22

அந்த பொம்பளை நல்ல கதை விடும் அதை நம்பி நீங்களும் சிங்கம், புலின்னு அதுக்குமேல அடிச்சு விடுறது எங்களுக்கும் தெரியுமுங்கோ. இன்னும் தொடர்தததுனா அடுத்து தன தம்பி /மவன் சீட் கேட்டு வந்துரும்.


kamal 00
ஏப் 15, 2025 06:26

அடேங்கப்பா உங்க பாட்டையா கால் மாடு, தலமாடு ன்னு உண்ணா விரதம் வெப் சீரிஸ் நடிச்சப்போ நாங்க நம்புனோமே


Priyan Vadanad
ஏப் 15, 2025 00:11

என்றைக்கு இவர்கள் நட்பு உருவானது? நல்ல மனிதர், பொய் சொல்லாத மனிதர் விஜயகாந்த் அவர்கள் எப்போதாவது இது பற்றி பேசியிருந்தால் தெரிவிக்கலாம்.


Thetamilan
ஏப் 14, 2025 23:37

திமுக மீதான பயம் தொற்றிக்கொண்டது


Bala
ஏப் 15, 2025 01:17

பணபேய்களை கண்டாலும் தீயசக்திகளை கண்டாலும் சாராய கஞ்சா ஆட்சியாளர்களை பார்த்து யாருக்கும் பயம் தொற்றிகொள்ளத்தானே செய்யும். நீங்கள் கூறியது சரியே. நேர்மை நல்லாட்சியை விரும்பும் அனைத்து தமிழக மக்களுக்கும் திமுக என்ற தீய சக்தியை கண்டால் பயம்தான்


Thetamilan
ஏப் 14, 2025 23:36

கொள்ளையடிக்க வழி கிடைக்குமா என்று ஒவ்வொரு இடமாக அலையும் கும்பல்


மீனவ நண்பன்
ஏப் 15, 2025 00:59

தமிழ் புத்தாண்டுக்கு கூட வாழ்த்து சொல்ல இயலாத திராவிட கும்பல்கள் இப்படிதான் அலையும்


Bala
ஏப் 15, 2025 01:19

திமுகவை சரியாக புரிந்து வைத்துள்ளீரே. அன்று PTR சொன்னார். 30,000 கோடிகளை வைத்துக்கொண்டு பட்டத்து இளவரசரும் மாப்பிள்ளையும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றனர் என்று. இன்று நீங்கள் சொல்லியுள்ளீர்கள் கொள்ளையடிக்க வழிகிடைக்குமா என்று அலையும் கும்பல் என்று. சரிதான்


மீனவ நண்பன்
ஏப் 14, 2025 23:25

அம்மணிக்கு டப்பு தானே குறிக்கோள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை