உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., வேட்பாளராக மஞ்சுநாத் பிரதமர் மோடி விருப்பம்

பா.ஜ., வேட்பாளராக மஞ்சுநாத் பிரதமர் மோடி விருப்பம்

பெங்களூரு : ஜெயதேவா இதய மருத்துவமனையின் இயக்குனராக பணியாற்றி, சமீபத்தில் ஓய்வு பெற்றவர் டாக்டர் மஞ்சுநாத். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் ஆவார். லோக்சபா தேர்தலில் ம.ஜ.த., வேட்பாளராக பெங்களூரு ரூரல் அல்லது மாண்டியாவில், மஞ்சுநாத்தை போட்டியிட வைக்க, தேவகவுடா, குமாரசாமி ஆசைப்படுகின்றனர்.தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, குமாரசாமி டில்லி சென்று இருந்தார். மஞ்சுநாத்திற்கு 'சீட்' வழங்குவது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.அப்போது, 'டாக்டர் மஞ்சுநாத் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட, பிரதமர் மோடி விருப்பப்படுகிறார். அவர் பா.ஜ., சார்பில், பெங்களூரு ரூரல் தொகுதியில் போட்டியிடட்டும். கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு அவர் வென்றால், நமக்கு அனுகூலம் தான். மஞ்சுநாத்தை எங்களுக்கு கொடுத்தால், உங்களுக்கு கூடுதலாக ஒரு தொகுதி தருகிறோம்' என்று, குமாரசாமியிடம், அமித்ஷா கூறி உள்ளார்.இதுபற்றி தேவகவுடாவிடன் பேசி முடிவு எடுப்பதாக கூறி, குமாரசாமி டில்லியில் இருந்து புறப்பட்டு வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை