உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப் பட்டது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று எதிர்க்கட்சிகளின் அமளியுடன் துவங்கியது. ராஜ்ய சபாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும், சபையில் முழக்கமிட்ட எதிர்க்கட்சியினரை அமைதிப்படுத்துவதில் மும்முரம் காட்டினார். இந்தச் சூழலில், திடீரென துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜக்தீப் தன்கர் நேற்றிரவு அறிவித்தார். மேலும், தன் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.அதில், மருத்துவ காரணங்களுக்காக பதவி விலக முடிவு எடுத்ததாக ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், இன்று (ஜூலை 22) துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

யார் இந்த ஜக்தீப்?

* கடந்த 2022ல் துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றார். * இவர், 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மேற்கு வங்க கவர்னராக ஜக்தீப் தன்கர் இருந்தார். * 1990ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான இணையமைச்சராக பதவி வகித்தார்.

ஆரோக்கியமாக இருங்க...!

இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ஜக்தீப் தன்கர் இந்திய துணை ஜனாதிபதி பதவி உட்பட பல பதவிகளில் நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

AMMAN EARTH MOVERS
ஜூலை 22, 2025 18:32

பாஜக தான் கரணம்


spr
ஜூலை 22, 2025 18:13

அநேகமாக பீஹார் கவர்னர் ஆரிப் முகமதுகான், அல்லது ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் இவர்களுக்கே வாய்ப்பு. பாஜக கண்டெடுத்த அண்மைக்கால கதாநாயகன் திரு தரூர் கூட வாய்ப்புள்ளவர்தான் என்றாலும், அடுத்து வரப்போகும் பல முக்கியமான மசோதாக்களில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவையென்பதால் திரு கலாம் போல ஒரு சிறுபான்மையினத் தலைவர் பாஜகவுக்குத் தேவை. திரு குலாம் நபி தேர்வானால், காங்கிரசுக்கு மற்றுமொரு ஆப்பு வைத்தாற்போல. ஒருவேளை திரு தன்கர் பாஜகவின் புதிய தலைவராகிறாரோ


GMM
ஜூலை 22, 2025 12:59

மருத்துவ காரணங்களுக்காக பதவி விலக முடிவு எடுத்ததாக துணை ஜனாதிபதி ஶ்ரீ ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டு இருந்தால், மருத்துவ அறிக்கை வெளியிட வேண்டாமா? மத்திய அரசு ராஜினாமா ஏற்பை நிலுவையில் வைத்து இருக்க வேண்டும்.


V Venkatachalam
ஜூலை 22, 2025 14:02

நிலுவையில் ஏன் வைக்க வேண்டும்? வேலை செய்யமுடியவில்லை என்று சொன்ன பிறகு ரிஜினாமாவை ஏற்றுக் கொண்டு அனுப்பி வைப்பதுதான் கவுரவம் .முடிந்தால் சின்னதா பிரிவுபசார விழா நடத்தி போட்டோக்கள் எடுத்து கொள்ளலாம். மற்றபடி வாழ்த்தி அனுப்பிவைப்பது தான் நடைமுறை. தேச பக்தியுள்ள தன்கர் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.


P. SRINIVASAN
ஜூலை 22, 2025 12:45

பிஜேபியின் புது ஆட்டம் தொடங்கிவிட்டது.


vivek
ஜூலை 22, 2025 16:38

ஆமாம் புதிய ஆட்டம் திமுகவிற்கு பலத்த அடி தரும். சீனு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை