உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுங்க; மோடிக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள்!

இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுங்க; மோடிக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள்!

ஸ்ரீநகர்: 'பாலஸ்தீனம், லெபனானில் மக்கள் ரத்தம் சிந்துவதை நிறுத்த, இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.ஜம்மு காஷ்மீர் பாரமுல்லாவில் நடந்த நிகழ்ச்சியில், உமர் அப்துல்லா பேசியதாவது: பாலஸ்தீனத்திலும் அல்லது லெபனான் நாட்டிலும் மக்களைக் கொல்வதை நிறுத்துமாறு பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு அழுத்தம் தர வேண்டும்.

கொலைகளை நிறுத்துங்க!

இன்று ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு பா.ஜ., எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. தங்கள் ஆட்சியில் பா.ஜ., மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இதனால் அவர்கள் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸைக் குறை கூறுவார்கள்.

நோ கமென்ட்ஸ்

நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெக்பூபா முப்தி போன்ற சில அரசியல் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை இடைநிறுத்தியது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை' என உமர் அப்துல்லா பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Venkatesan Srinivasan
அக் 04, 2024 14:14

நவராத்திரி - தஸரா துர்காதேவி மிகுந்த பலத்துடன் அரக்கர்களை வதம் செய்யும் தருணம். வேடிக்கை வேண்டுமானால் பார்க்கலாம்.


karthik
அக் 01, 2024 11:47

சவுதி அரேபியாவே ஒன்றும் சொல்லவில்லை.. மாறாக நாட்டில் பாலஸ்தீனம் ஹமாஸ் ஹிஸ்புல்லா என்றெல்லாம் போராட போஸ்டர் ஓட்ட தடை விதித்துள்ளது மீறினால் சிறை என்று அறிவித்துள்ளது இவனுங்க டுப்லிகேட் என்னடா என்றால் சிறப்பான பாரத நாட்டை நிம்மதி இல்லாமல் செய்கிறார்கள்.


S Ramkumar
அக் 01, 2024 09:45

ஏன் உமர் நீங்க ஹிஸ்புல்லாவுக்கு தீவிரவாதத்தை நிறுத்தும்படி அழுத்தம் குடுக்க கூடாது.


R.SANKARAPANDIAN
அக் 01, 2024 08:53

ஏன் மோடி ஜி அவர்கள் இஸ்ரேல் க்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ராகுல் ஜி, உமர் அப்துல்லா ஜி கொடுக்கலாமே?


vijai
செப் 30, 2024 14:04

காஷ்மீரில் எத்தனை இந்துக்கள் ரத்தம் சிந்து போது உனக்காக தெரியலையா


RAMAKRISHNAN NATESAN
செப் 30, 2024 13:49

மூர்க்கத்தின் கதறல் சத்தம் ரொம்ப அதிகமாயிட்டே போகுதே ????


Sivagiri
செப் 30, 2024 13:48

இந்த கும்பலை இஸ்ரேலுக்கு வண்டி ஏத்தி விடுங்கோ . . . போயி சமாதானம் பண்ணீட்டு வாங்கோ-ன்னு அனுப்பி விடுங்கோ . . .


Sridhar
செப் 30, 2024 13:40

ரத்தம் சிந்தாமல் இருக்க, வேணும்னா ஒரு பிளாஸ்டிக் சீட் போட்டு கட்ட சொல்லலாம். இஸ்ரேலுக்கு மேலும் அழுத்தம் கொடுத்தா, இன்னும் பிதுக்கி எடுத்துறமாட்டாங்களா கோபால்? இந்த மாதிரி வெக்கம் கெட்ட மனிதர்களை இந்தியா இன்னும் விட்டு வைத்திருக்கிறதே


Velayutham rajeswaran
செப் 30, 2024 13:35

வங்கதேசத்தை சார்ந்த மக்கள் ரத்தம் சிந்திய போது எங்கே போனான்


vadivelu
செப் 30, 2024 13:18

சார் சொல்வது சரிதான். ஆனால் அது ஏன் வங்க தேசத்தில் இந்துக்களை அடித்து கொன்ற நேரத்தில் இந்த மத வெறியருக்கு தோன்றவில்லை. வெட்கமே இல்லையாடா, தேர்தல் வந்தால் மத பாசம் வருதா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை