உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி பா.ஜ.,வின் புதிய கட்டடம் பிரதமர் மோடி இன்று திறப்பு

டில்லி பா.ஜ.,வின் புதிய கட்டடம் பிரதமர் மோடி இன்று திறப்பு

புதுடில்லி,:பா.ஜ.,வின் டில்லி அலுவலக புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இதுகுறித்து, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: டில்லி மாநில பா.ஜ., அலுவலகம் முதலில் அஜ்மீரி கேட் பகுதியில் துவக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின், ரகாப்கஞ்ச் சாலைக்கு மாற்றப்பட்டது. அதன் பின், 35 ஆண்டுகளாக பண்டிட் பந்த் மார்க்கில் செயல்பட்டு வந்தது. கடந்த, 2023ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி தீன் தயாள் மார்க்கில் டில்லி பா.ஜ., அலுவலகத்தின் புதிய கட்டடத்துக்கு கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், முதல்வர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், பா.ஜ., தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !