உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை: பிரதமர் மோடி பெருமிதம்

லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை: பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கும் பணி தொடர்ந்து நடக்கிறது' என பிரதமர் மோடி தெரிவித்தார்.மத்திய அரசு வேலைக்கான நியமன கடிதங்களை, 51 ஆயிரம் பேருக்கு இன்று(அக்.,29) பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக வழங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அடி எடுத்து வைக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. அரசின் கொள்கைகள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lsjfttuk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தனி அடையாளம்

பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு வருகின்றன. ஹரியானாவில் பா.ஜ., அரசுக்கு என தனி அடையாளம் உள்ளது. ஹரியானாவில் புதிய அரசு அமைந்ததும் 26 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. எந்த செலவும் இல்லாமல் அரசு வேலை கிடைத்துள்ளது. குறிப்பாக, பணிநியமன ஆணை பெற்ற, ஹரியானா மாநில இளைஞர்களை வாழ்த்துகிறேன்.

தீபாவளி கொண்டாட்டம்

இந்த பண்டிகை காலக்கட்டத்தில், 51 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டே நாட்களில், தீபாவளியைக் கொண்டாடுவோம். இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்தது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு, அயோத்தியில் உள்ள தனது பிரமாண்ட கோவிலில் ராமர் அமர்ந்திருக்கிறார். அவரது பிரமாண்டமான கோவிலில் கொண்டாடப்படும் முதல் தீபாவளியாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.n. Dhasarathan
நவ 11, 2024 16:37

பிரதமர் சொலவது தவறு ஒன்றும் இல்லை, ராணுவத்தில் லட்சக்கணக்கில் சேர்க்கிறார்கள், ஆனால் ஒரு திருத்தம், நிரந்தர வேலை அல்ல, ஒப்பந்த வேலை, நான்கு வருடத்தில் வெளி வரவேண்டுமாம், அப்போ ராணுவ ரகசியங்களும் வெளிவந்துவிடுமா ? இதில் பெருமிதம் எங்கிருந்து வந்தாதுதான் புரியவில்லை. அந்த கடவுளுக்கே வெளிச்சம்.


அப்பாவி
அக் 29, 2024 17:09

வருஷத்துக்கு ரெண்டு கோடி வேலை குடுத்தாச்சு கோவாலு. நம்பு கோவாலு.


Kanns
அக் 29, 2024 15:49

False& Misleading Propagandas. For Better EmploymntOpportunities STRICTLY Implement 01Job per Family Only on MinmWagesUnskilld to SuperSkilld, ABOLISH All OverFatSalaries& Pensions-ReEmployment


jayvee
அக் 29, 2024 14:12

எந்த எந்த துறையில் எவ்வளவு நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டது , வருடம் மாதம் வாரியாக தெரிவித்தால்தான் மக்களும் நம்புவார்கள் .. ஒரு வெள்ளை அறிக்கை தேவை .. இதில் தனியார் நிறுவங்களை தனியாக காட்டவேண்டும்.. பாதுகாப்பு படை வேலைகளை தனியாக காட்டவேண்டும்.


hari
அக் 29, 2024 14:49

எப்போதும் கொத்தடிமையாக இருக்கும் உனக்கென்ன இதை பற்றி கவலை..... காட்டினாலும் புரியுமா


Indian
அக் 29, 2024 13:31

மெது வடை .. ரொம்ப சாப்ட்


hari
அக் 29, 2024 12:55

இங்கு எதிர் கமென்ட் போடும் வேலை வெட்டி இல்லாதவர்கள்...


Indian
அக் 29, 2024 12:46

இப்படியே உருட்டி உருட்டி இன்னும் நாற்பது வருஷம் ஓட்டிடுவோம் ...


Ramesh Sargam
அக் 29, 2024 12:43

வேலை இல்லாமல் சுத்தித்திரியும் ராகுல் காந்திக்கு ஒரு வேலை போட்டுக்கொடுங்க சார்.


Narayanan Muthu
அக் 29, 2024 13:25

உங்க வோனரே வேலை இல்லாமல் வடை சுட்டு மக்களை ஏமாற்றி காலத்தை ஒட்டிக்கொண்டுள்ளார். இதில் இவர் அடுத்தவங்களுக்கு வேலை கொடுப்பாராம். வெத்து வேட்டை தூக்கி பிடிக்கும் சங்கிகளை நினைத்தாலே பரிதாபமாக உள்ளது.


babu
அக் 29, 2024 12:32

புது வடை


Apposthalan samlin
அக் 29, 2024 12:15

பிஜேபி என்றாலே முறை கேடு தில்லு முள்ளு தான் பொது துறை நிறுவனங்களை அம்பானிக்கும் அதானிக்கும் கொடுத்த பிறகு எங்க இருந்து அரசாங்க வேலை .ஒரு தேர்வு கூட நேர்மையாக நடத்துவது கிடையாது வெளி தன்மை கிடையாது answer key கிடையாது இட ஒதுக்கீடு இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை