உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் அரசியலை மாற்றியவர் பிரதமர் மோடி: நட்டா பேச்சு

நாட்டின் அரசியலை மாற்றியவர் பிரதமர் மோடி: நட்டா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ‛‛ நாட்டின் அரசியல் வரையறை, நடைமுறையை பிரதமர் மோடி மாற்றி உள்ளார் '' என பா.ஜ., தலைவர் நட்டா கூறியுள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம் புல்தானா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நட்டா பேசியதாவது: நாட்டின் அரசியல் வரையறை, நடைமுறையை பிரதமர் மோடி மாற்றி உள்ளார். முன்பெல்லாம், வெறும் கோஷங்களை எழுப்பி, வாக்குறுதிகளை அளித்து விட்டு பிறகு அதனை மறந்துவிடுவர். ஆனால் மோடி வந்த பிறகு, இந்திய அரசியல் என்பது, வாக்காளர்களுக்கு பொறுப்பான அரசியலாக மாறிவிட்டது. ஓட்டு வங்கி அரசியலுக்கு பதிலாக பொறுப்பு அரசியல் செய்யப்படுகிறது. இதனால், வளர்ச்சியை நோக்கி நகர ஆரம்பித்து உள்ளோம். ஐ.மு., கூட்டணி ஆட்சியில் ஊழல் செய்தார்கள். உறவினர்களை ஊக்குவித்தார்கள். பொது மக்களை மறந்து போய் இருந்தனர். இவ்வாறு நட்டா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ