உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தே.ஜ., கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

தே.ஜ., கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

சண்டிகர்: சண்டிகரில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று கலந்துரையாடினார்.ஹரியானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த முதல்வர்களான சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் நட்டா பங்கேற்றனர்.இது குறித்து பிரதமர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், 'நல்ல ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து முதல்வர்களுடனான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எங்கள் கூட்டணி ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரமளிப்பதில் உறுதியாக உள்ளது' என்றார்.மேலும், ஹரியானாவில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது போல், வர இருக்கின்றன மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை