உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு ஷோ: பாஜவினர் உற்சாகம்

வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு ஷோ: பாஜவினர் உற்சாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: தனது தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ரோடு ஷோ நடத்தினர். பாஜவினர் திரளானோர் கூடி, பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர்.நமது நாட்டில் ரயில் பயணிகளிடம் வந்தே பாரத் ரயில் சேவைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து புதிதாக எர்ணாகுளம் - பெங்களூரு, பிரோஸ்பூர் - டில்லி, லக்னோ - ஷஹாரான்பூர், பனாரஸ் - கஜூராஹோ நகரங்களுக்கு இடையே புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில் சேவையை நாளை( நவ.,08) காலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி வாரணாசியில் நடக்கிறது.இதற்காக பிரதமர் மோடி வாரணாசி சென்றடைந்தார். அங்கு அவர் 'ரோடு ஷோ' நடத்தினார். வழிநெடுகிலும் பாஜவினர் ஏராளமானோர், கட்சிக் கொடியுடன் ஒன்று கூடி வரவேற்பு கொடுத்தனர். மோடி பயணித்த கார் மீதும் ரோஜா மலர்களை தூவினர். தொண்டர்களை நோக்கி கையசைத்தபடியே பிரதமர் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
நவ 08, 2025 14:30

அங்கு தில்லாலங்கடி இல்லாததால் நெரிசல் விபத்து ஏற்படுத்த வாய்ப்பில்லை.


சுந்தர்
நவ 07, 2025 21:22

திகழ் அங்க இப்படி கிடையாது. ஆனா செக்யூரிட்டி ஆட்களுக்கு கஷ்டமான வேலை.


Narayanan Muthu
நவ 07, 2025 21:51

செக்யூரிட்டி ஆட்களுக்கு உள்ள கஷ்டமான வேலையை விட அவரின் பர்சனல் புகைப்படக்காரர்களுக்கு உள்ள வேலை மிக கடினமானதாக இருக்கும்.


திகழ்ஓவியன்
நவ 07, 2025 21:11

ரோடு ஷோ BANNED என்கிறார்கள் இவர் மட்டும் எப்படி போகிறார்


vivek
நவ 07, 2025 21:52

அங்கே உம்மைப்போல் இருநூறு ரூபாய் கொத்தடிமைகள் இல்லையே


vivek
நவ 07, 2025 21:54

கரூர் மாதிரி அங்கே பண்ண முடியாது திகழ்...சுளுக்கு எடுப்பாங்க


சமீபத்திய செய்தி