உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயலாஜிக்கலாக நான் பிறக்கவில்லை பரமாத்மா என்னை கொண்டு வந்தார்: மோடி உணர்ச்சி பேச்சு

பயலாஜிக்கலாக நான் பிறக்கவில்லை பரமாத்மா என்னை கொண்டு வந்தார்: மோடி உணர்ச்சி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நான் பயாலஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை, என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்'' என பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியதாவது: என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்து பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2iyf7qka&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

பலமான பா.ஜ., அரசு: மோடி பெருமிதம்

உ.பி மாநிலம் பஸ்தி நகரில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் 5வது பொருளாதார சக்தியாக இந்தியா மாறியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. இந்தியா முடிவெடுத்தால் உலகமே முன்னேறும். பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டதால் அதன் அனுதாபிகளான காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி மக்களை அச்சுறுத்துக்கின்றன. இந்தியாவில் இப்போது பலவீனமான காங்கிரஸ் அரசு இல்லை. பலமான பா.ஜ., அரசு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

INDIAN Kumar
மே 24, 2024 17:34

இந்தியாவை காக்கவும் ஆக்கவும் வந்த சித்தர் மோடிஜி


INDIAN Kumar
மே 24, 2024 17:32

பாஜகவின் கட்சி ஆதரவு விட மோடிஜியின் ஆதரவாளர்கள் தான் அதிகம் இறைவனின் மற்றுமொரு அவதாரம் இந்தியாவை வல்லரசாக்க வந்த மாபெரும் சித்தர்.


INDIAN Kumar
மே 24, 2024 17:29

மூன்று முறை முதல்வர் , மூன்றாவது முறை பிரதமர் ஆகக்கூடியவர் , இறை அருள் இல்லாமல் சாத்தியமாகுமா ? இவருக்கு இணை யார் இருக்கிறார் சொல்ல முடியுமா ???


ThamizhMagan
மே 23, 2024 21:07

"பரமாத்மா என்னை கொண்டு வந்தார், அவர்தான் கல்யாணம் ஆன உடனே ஓடிப்போகவும் சொன்னார், அவர்தான் கோத்ராவில் தீவிரவாதம் நடக்கும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க சொன்னார்" :-


Rahulakumar Subramaniam
மே 23, 2024 18:02

இதில் ஒன்றும் தவறில்லையே வாழ்க மோடிஜி


gopi
மே 23, 2024 07:45

ஆனா இது புதுசா இருக்குண்ணே... புதுசா இருக்கு... சங்கிகளின் அடுத்த புராஜக்ட் இவருக்கு மாநிலம் மாவட்டம் தோறும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது...ஒரே கூத்து தான் போங்கோ....


ஜெயம்
மே 22, 2024 19:44

புத்தம் புது சுவிசேஷமால்ல இருக்கு...


Rahulakumar Subramaniam
மே 22, 2024 19:06

ஒவ்வொருவரும் கடவுளின் படைப்புதான் , ஆனால் மோடிஜி விசேட படைப்பு ஐயா


சண்முகம்
மே 22, 2024 18:17

Immaculate conception?


Selvam Nattamai
மே 22, 2024 17:44

காமெடி


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ