உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 புலிகளை விஷம் வைத்துக் கொன்றது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்; 2 பேர் கைது

5 புலிகளை விஷம் வைத்துக் கொன்றது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்; 2 பேர் கைது

பெங்களூரு: மாதேஸ்வரன் மலை வன விலங்குகள் சரணாலயத்தில் தாய்ப்புலி மற்றும் 4 குட்டிகளின் மரணம் பழிவாங்கும் செயலாகும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின் மாதேஸ்வரன் மலையில் மீன்யம் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு தாய்ப்புலியும், 4 குட்டிப்புலிகளும் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்து கிடந்தன. வனத்துறை ஊழியர்கள், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, புலிகள் இறந்து கிடந்ததை கண்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், புலிகளின் உடல்களை பார்வையிட்டனர். சுற்றுப்புற கிராமங்களில் யாராவது, இறைச்சியில் விஷம் கலந்து, புலிகளை கொன்றிருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகித்தனர். புலிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். புலிகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தற்போது தாய்ப்புலி மற்றும் 4 புலி குட்டிகளின் மரணம் பழிவாங்கும் செயலாகும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. புலியால் பசு கொல்லப்பட்ட பிறகு, பழிவாங்க ஒரு கிராமவாசி 4 புலிகளுக்கு விஷம் கொடுத்தது தெரியவந்தது. புலி கொன்ற பசுவின் உரிமையாளரின் மகன் பழிவாங்கத் திட்டமிட்டான். புலி மற்றும் அதன் குட்டிகள் பசுவின் சடலத்தை உண்ணும் என்பதை நன்கு அறிந்துள்ளான். இதன் பிறகு, அவர் பசுவின் சடலத்தில் பூச்சிக்கொல்லியைப் பூசினார். இதனை உட்கொண்ட, தாய்ப்புலி மற்றும் 4 புலி குட்டிகள் உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.புலிகள் எண்ணிக்கையில், இந்தியாவிலேயே கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது. புலிகள் பாதுகாப்பில் பிரசித்தி பெற்ற மாநிலத்தில், 5 புலிகள் இறந்தது, வன விலங்குகள் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

மிகுந்த மன வேதனை!

இது குறித்து, கர்நாடகா முதல்வர் சித்தராமையா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் தாய்ப்புலி மற்றும் 4 குட்டி புலிகள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மனதிற்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இது குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாப்பது நமது பொறுப்பு, சொந்தங்களின் மீது காட்டும் அன்பை வனவிலங்குகள் மீது காட்ட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
ஜூன் 28, 2025 16:27

நமது சட்டங்கள் மதக் கலவரம் என்ற பெயரில் ஆயிரம் சிறுபான்மை இனத்தவரைக் கொன்றவரையே ஒன்றும் செய்ய முடியவில்லை!


Pandi Muni
ஜூன் 28, 2025 20:22

பெருத்து கெடக்கு, சிறுபான்மையினம்


theruvasagan
ஜூன் 28, 2025 22:11

2 கோடி 20 கோடியானது சிறுபான்மையா. அந்த எண்ணிக்கை மொத்தமா அவங்களே இருக்கும் எந்த நாட்டிலும் இல்லை. 20 கோடியை சிறுபான்மை என்று சொல்லுவது அபத்தம்.


தமிழ்வேள்
ஜூன் 28, 2025 14:02

தேசிய விலங்கை அவமதிப்பது , தேசத்தை அவமதிப்பதற்கு ஒப்பானது ...இதற்கு மிக கடுமையான தண்டனை தரவேண்டும் ....புலிகள் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் மாடு மேய்த்தது இவர்களது தவறு ...புலியை பொறுத்தவரை மாடு ஒரு இரை ..அவ்வளவே ..அதுவும் பசி இருந்தால்தான் வேட்டையாடும் ....இந்த புலிகொலைகாரனுக்கு தரும் தண்டனையில் , அடுத்தவன் யாரும் இந்தமாதிரி கேவலத்தில் ஈடுபட இயலாத அளவு பயம் வரவேண்டும் .


Seekayyes
ஜூன் 28, 2025 13:31

விலங்கினதைதிற்கு துன்பம் தருவது, அதிலும் தேசிய விலங்கினை வேட்டையாடுவதோ, துன்புறுத்துவதோ, யாராக இருந்தாலும், அவர்களுக்கு மரண தண்டனை தரப்பட வேண்டும். சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.


Manaimaran
ஜூன் 28, 2025 13:27

அப்ப பசு செத்ததுக்கு எவண் என்ன சொல்ல வாரனுக


தஞ்சை மன்னர்
ஜூன் 28, 2025 11:53

மனித குட்டிகளைத்தான் என்ன வென்று தெரியாமலே கொலை செய்யகின்றார் இந்த அழகு மிருக குட்டிகள் என்ன பாவம் செய்தது அதனுடைய பாவம் சும்மா விடாது ஒரு பசுவின் விலை யை விட ஒரு புலியின் பாதிப்பு அளவிடமுடியாதது பசு மனிதனிடம் வளரும் மிருகம் அதனை வேறு வகையில் நாம் பெற்று கொள்ளமுடியும் ஆனால் காட்டில் தன்னிச்சையாக வளரும் இந்த மிருகம் எப்படி தன்னை வளர்த்து கொள்ளமுடியும் 4 பிஞ்சு குட்டிகளின் மரணம் ஏற்கவே முடியாத ஒன்று அது தாயுடன் விளையாடும் அழகே தனி அழகு தூரத்தில் இருந்து ரசிக்க வேண்டியத்தினை அது வாழும் இடத்தில நீ போனது தப்பு பசுவின் மரணம் அது இயற்க்கை நீ புலிகளை கொன்றது பாவம் நிச்சயம் மனிதன் தான் அதனை தேடி சொல்லுகிறான் அதனால் ஏற்படும் மரணம் இயற்க்கை அது மிருக குணம் அதற்க்கு மனிதன் மற்றம் மற்ற மிருகம் என்பது தெரியாது தற்கு தேவை இறைச்சி இதுதான் இயற்க்கை மதிகெட்ட அந்த மனித மிருகத்திற்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்


Apposthalan samlin
ஜூன் 28, 2025 10:37

avanukum அதே பூச்சி கொல்லி மருந்து கொடுத்து கொள்ள வேண்டும்


அன்பே சிவம்
ஜூன் 28, 2025 10:24

அவனை கல்லால் அடித்தே கொல்ல வேண்டும்


T. Sivaraj
ஜூன் 28, 2025 10:18

மனிதன்தான் இந்த உலகத்தில் மிக ஆபத்தான மிருகம்.


புதிய வீடியோ