உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சந்தேஷ்காலியில் போலீசார் அராஜகம் :மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை

சந்தேஷ்காலியில் போலீசார் அராஜகம் :மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை

கோல்கட்டா 'மேற்கு வங்கத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ரவுடி கும்பலுடன் கைகோர்த்து போலீசார் அடக்குமுறையில் ஈடுபடுகின்றனர்' என, அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி பகுதியின் திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜகான் ஷேக். இவரும், இவரது கூட்டாளிகளும் அப்பகுதியினரிடம் பலவந்தமாக நிலங்களை கைப்பற்றியதாகவும், அங்குள்ள பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அவர்களை கைது செய்ய வலியுறுத்தி, சந்தேஷ்காலியைச் சேர்ந்த பெண்கள் கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற மாநில பா.ஜ., தலைவர் சுகந்தா மஜும்தார், போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மயங்கி விழுந்தார். இந்நிலையில், சந்தேஷ்காலி பகுதியை சமீபத்தில் ஆய்வு செய்த மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:சந்தேஷ்காலியில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன், பாலியல் துன்புறுத்தலும் அரங்கேறி உள்ளது அங்கிருப்பவர்களின் வாக்குமூலம் வாயிலாக தெரிய வருகிறது. சட்டத்தை காப்பாற்றும் போலீசார், ரவுடிகளுடன் கைகோர்த்துக் கொண்டு அங்கு அடக்குமுறையில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆளுங்கட்சி நிர்வாகிகளின் அதிருப்திகரமான செயலால் மக்கள் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். தங்கள் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு அதிரடிப்படை அல்லது சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் விரும்புகின்றனர். ஆட்சி அதிகாரத்துக்கு பயந்து அதிகாரிகள் அமைதி காக்கின்றனர். கடும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். போலீசார் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சந்தேஷ்காலியில் நிலவும் சூழலை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். அங்கு யாருக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. இழைக்கப்படவும் அனுமதிக்கமாட்டோம். குற்றம் தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.தவறான செயலில் ஈடுபட்ட எவரும் தப்ப முடியாது. நிலைமையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

தப்ப முடியாது'

எஸ்.சி., கமிஷன் விசாரணை!

சந்தேஷ்காலியில் நடந்த அநீதி குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என பா.ஜ., கோரிய நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் பட்டியல் இனத்தவருக்கான தேசிய கமிஷன் நேற்று விசாரணை நடத்தியது. இதுகுறித்து கமிஷனின் தலைவர் அருண் ஹல்தார் கூறுகையில், ''நிறைய மக்கள் பல விஷயங்களை கூற விரும்புகின்றனர். அவர்கள் சொல்வதை கேட்கதான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார். கமிஷன் அதிகாரிகளின் விசாரணையின் போது, கிராம மக்கள் பலர் தங்களை குறைகளைக் கூறி கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஷிபா பிரசாத் ஹஸ்ரா, உத்தர் சர்தார், ஷாஜகான் ஷேக் உட்பட ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகளை கிராம மக்கள் கமிஷனிடம் எழுத்துப்பூர்வமாக தந்தனர். இதற்கிடையே, நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் கொண்ட 6 பேர் அடங்கிய குழுவை பா.ஜ., அமைத்துள்ளது. இந்த உயர்மட்டக் குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

vbs manian
பிப் 16, 2024 08:47

மம்தாவுக்கு இன்னும் ஒரு கரும் புள்ளி. மணிப்பூர் பற்றி துரத்தி துரத்தி பதிவிட்ட தமிழ் ஊடகங்கள் ஏன் பயங்கர மௌனம். பெண்டிர் உரிமை போர்கொடிகள் ஏன் தூக்கம்.


Duruvesan
பிப் 16, 2024 07:32

இங்க கருத்து எழுதும் கும்பல் மூர்கன் செய்தால் மூடிட்டு இருப்பானுங்க, முரசொறி,the hindu, விகடன் எல்லாம் பொத்திட்டு இருக்கும். இண்டி கூட்டணி மொத்தத்தையும் மூடிக்கிவான். விடியல் குருமா எல்லாம் காணாம போய்டுவானுங்க. மனிபூர்னு குதிச்ச கனி குருமா எல்லாம் அங்க போக மாட்டானுங்க, ஏன்னா பாதிக்க பட்டது ஹிந்து பட்டியல் இனத்தவர்


RAAJ68
பிப் 16, 2024 07:28

இவர் ஆங்கில செய்தி சேனலுக்கு ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்ததை எல்லாரும் பார்க்க வேண்டும். மிகத் தெளிவாக அழகாக எல்லோருக்கும் புரியும் வகையில் பேசியதை இன்று முழுவதும் கேட்கலாம். அருமையான நியாயமான மனிதர்.


யாதன்
பிப் 16, 2024 06:52

இங்க எந்த தவறும் நடக்கவில்லையாம் ஆனால் 17 பேர் கைதாம் என்ன சொல்லுகிறார்??


Ramesh Sargam
பிப் 16, 2024 06:34

பாகிஸ்தானை அடக்கி வைத்திருக்கிறோம். ஏன் சீனாவையே அடக்கி வைத்திருக்கிறோம். ஆனால் இந்த மமதாவை அடக்க முடியவில்லையே..


ராஜா
பிப் 16, 2024 06:33

இதை இங்கே இருக்கும் ஊடகங்கள் ஒருவன் கூட வாயை திறந்து பேச மாட்டான். இதுவே மணிப்பூர் அல்லது பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு பெரும்பான்மை மதத்தினரால் நடந்திருந்தால் இந்நேரம் குறைந்தது இங்கேயே 100 கருத்துக்கள் வந்திருக்கும். எல்லோரும் காரியமாக தான் கூவுகிறார்கள்.


Bellie Nanja Gowder
பிப் 16, 2024 06:21

சந்தேஷ்காலியில் நிலவும் சூழலை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். அங்கு யாருக்கும் எந்த அநீதியும் இழைக்க படவில்லை -இது மம்தாவின் அறிக்கை . பின் எதற்காக 17 பேர் கைது???


VSaminathan
பிப் 16, 2024 05:39

ஆக மொத்தம் தீதி மம்தா கஷ்மீருக்கு அக்காவாகப் பார்க்கிறார்-துலுக்கர்களுக்கு முடை நின்று இந்துக்களை துன்புறுத்தி அதன்மூலம் பா ஜ கவை வீழழதழத கனவு காணுகிறார்-சட்டணபையை ஆறுமாதம் முடக்குங்கள்,தானாக சரியாவார்-அதோட சமூக விரோதிகளை சுட்டுத் தள்ள ராணுவத்தை அனுப்புங்கள்-பருக் அப்துல்லாவுக்கு இந்திராகாந்தி கொடுத்த தண்டனையை மம்தாவுக்கும் கொடுங்கள்-இப்போது மே.வஙழகத்துக்கு தனி சிறப்பு அந்தஸ்தை 370 மூலம் வழங்கி அதே மக்களை பத்து வருடங்களில் தன்னிறைவடையச் செய்து தீதியின் திமிரை அடக்குங்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி