உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

புதுடில்லி:போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது, டில்லி மாநகரப் போலீசாரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு டில்லி கோட்லா முபாரக்பூர் பி.பி. மார்க்கில் நேற்று முன் தினம் இரவு, சப்--இன்ஸ்பெக்டர் பிரேம் சிங் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமாவதார் ஆகியோர் கண்காணிப்புப் பணியில் இருந்தனர்.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ராமாவதார் 10 நிமிடங்கள் ஓய்வெடுக்க விரும்புவதாக பிரேம் சிங்கிடம் கூறிவிட்டு, தடுப்புக்கு அருகில் நிறுத்தியிருந்த காருக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து பிரேம் சிங் காருக்கு சென்றார். காருக்குள் ராமாவதார் இறந்து கிடந்தார். அவரது தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது. அவரது வலது கையில் கைத்துப்பாக்கி இருந்தது.தகவல் அறிந்து உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். விசாரணைக்குப் பின், அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஹரியானா மாநிலம் மஹேந்தர்கர் நகரைச் சேர்ந்த ராமாவதார், 1993-ல் டில்லி மாநகரப் போலீசில் கான்ஸ்டபிளாக சேர்ந்தார். கோட்லா முபாரக்பூர் உதவி சப்-இன்ஸ்பெக்டராக இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் டில்லி மாநகரப் போலீசாரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ