மேலும் செய்திகள்
பசுக்களின் மடியை அறுத்து மர்ம கும்பல் அட்டகாசம்
13-Jan-2025
பெங்களூரு: கர்நாடகாவில் பசுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால், போலீசார் திணறி வருகின்றனர்.கர்நாடகாவில் கடந்த 10 நாட்களாக பெங்களூரு உட்பட பல மாவட்டங்களில் பசுக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன. பெங்களூரின் சாம்ராஜ்பேட்டில், குடிபோதையில் மூன்று பசுக்களின் மடியை, கத்தியால் அறுத்த நபரால் பதற்றம் ஏற்பட்டது. பா.ஜ., உட்பட பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தால், பீஹாரை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து, மைசூரு மாவட்டம் நஞ்சன்கூட்டில் பசுவின் வாலை, மர்ம நபர்கள் வெட்டினர்.உத்தர கன்னடா மாவட்டம், ஹொன்னாவர் சல்கோடு கிராமத்தில், கிருஷ்ணாச்சாரி என்பவர் பசுக்களை வளர்த்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன், தனது பசுக்களை புல் மேய விட்டிருந்தார். இரவாகியும் கர்ப்பமாக இருந்த பசு மட்டும் வரவில்லை. மறுநாள் காலை பசுவை தேடி சென்றபோது, பசுவின் தலை, கால்களை மர்ம நபர்கள் வெட்டிவிட்டு, உடலை மட்டும் எடுத்து சென்றுள்ளனர். பசுவின் வயிற்றில் இருந்த கன்றின் உடலை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஹொன்னாவரா போலீசில் புகார் அளித்துள்ளார். மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மாநிலத்தில் தொடர்ந்து பசுக்கள் மீது நடக்கும் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இறைச்சிக்காக பசுக்கள் வெட்டப்படுவதால், குறிப்பிட்டவர்கள் மட்டும் செய்துள்ளனரா அல்லது வேறு யாராவது இதை செய்து, மற்றொரு சமூகத்தின் மீது பழியை சுமத்துகின்றனரா என்று தெரியவில்லை.கடந்த 3ம் தேதி, மாவட்டத்தின் சிக்கனகோடாவில், கர்ப்பமாக இருந்த பசுவை திருட, சிலர் காரில் வந்துள்ளனர். அந்நேரத்தில் இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் அவர்களை நோக்கி வருவதை பார்த்து அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.'ஓராண்டுக்கு முன் இரண்டு முறை பசுக்கள் திருடப்பட்டும், இன்னும் அதை கடத்தியவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை' என்று பசுக்களை பறிகொடுத்த பெண் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.இதுபோன்று பல புகார்கள், போலீசில் அளிக்கப்பட்டும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டோர் குற்றஞ்சாட்டுகின்றனர். பசுக்கள் மீதான தாக்குதல், போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 'இறைச்சிக்காக கடத்தப்பட்டால், யார் வெட்டினர்; எங்கு கொண்டு சென்று விற்பனை செய்தனர்' என்பது போலீசாருக்கு தெரியாது. அப்படி இருக்கும் போது, இத்தகைய வழக்குகளை எப்படி கண்டுபிடிக்க முடியும் என போலீசார் திணறி வருகின்றனர்.
13-Jan-2025