உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விசாரணை நடத்த சென்ற போலீஸ் அதிகாரி கொலை

விசாரணை நடத்த சென்ற போலீஸ் அதிகாரி கொலை

பாட்னா: பீஹாரில் வழக்கு விசாரணைக்கு சென்ற போலீஸ் அதிகாரியை, கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீஹாரில் முங்கர் மாவட்டத்தின் முபாசில் போலீஸ் ஸ்டேஷனில், சந்தோஷ் குமார் சிங் என்பவர் உதவி சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர், சக போலீசாருடன் இணைந்து, அருகே உள்ள நந்தலால்பூர் கிராமத்திற்கு வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் இரவு சென்றார். விசாரணையின்போது, அப்பகுதி மக்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இது, கைகலப்பாக மாறியது. அப்போது, அக்கூட்டத்தில் இருந்த சிலர், சந்தோஷ் மீது பயங்கர ஆயுதத்தால் தலையில் அடித்தனர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை, சக போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.அதன்பின் மேல்சிகிச்சைக்காக பாட்னா அரசு மருத்துவமனைக்கு சந்தோஷ் குமார் மாற்றப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், உதவி எஸ்.ஐ., மீது தாக்குதல் நடத்திய ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் அராரியா மாவட்டத்தின் லட்சுமிபூர் பகுதியில் மற்றொரு வழக்கு விசாரணைக்காக, புஹுல்காஹா போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த உதவி எஸ்.ஐ., ராஜிவ் ரஞ்சன் என்பவர் சமீபத்தில் சென்றார். அப்போது, குற்றவாளியை கைது செய்ய முயன்றபோது, கிராம மக்கள் தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை