தலைக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலை சுட்டுக்கொன்றது போலீஸ் படை!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி:தலைக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சன் தலைவனை, இன்று பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், தெலுங்கானா மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் குழுக்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. இதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், '2026ல் நக்சல் அமைப்பினர் முற்றிலும் ஒழிப்போம்' என்று செயல் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.அதன் தொடர் நடவடிக்கைகளால் நக்சல் அமைப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது. ஏராளமான நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் சரண் அடைந்துள்ளனர். மிச்சம் மீதம் இருப்பவர்களும் மலை கிராமங்களில் பதுங்கி வாழ்கின்றனர்.அப்படி தப்பி இருக்கும் நக்சல்களையும் பாதுகாப்பு படையினர் தேடி வேட்டையாடி வருகின்றனர்.ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா பகுதியில் கோப்ரா பட்டாலியன் படைப்பிரிவினர் நடத்திய தாக்குதலில், நக்சல் அமைப்பின் முக்கிய புள்ளி ஒருவன் கொல்லப்பட்டான்.அவனது பெயர், அமித் ஹன்சா என்று தெரியவந்துள்ளது. அவனைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு, மத்திய அரசு, 10 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருந்த நிலையில், அமித் ஹன்சா என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளான். இவன் குறிப்பிட்ட இந்த பகுதியில் செயல்பட்ட நக்சல் படைக்கு தலைவனாக செயல்பட்டவன் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த தகவலை, ஜார்க்கண்ட் நக்சல் ஒழிப்பு போலீஸ் படை ஐஜி மைக்கேல் ராஜ் தெரிவித்தார்.அந்த பகுதியில் நக்சல் வேட்டை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.