மேலும் செய்திகள்
பணப்பையை பறித்து சென்ற போலீஸ் எஸ்.ஐ.,சஸ்பெண்ட்
05-Apr-2025
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கிளிமானுரைச் சேர்ந்தவர் விஜய் யசோதரன், 31; ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்தார். இவருக்கு திருமணமாகி, குழந்தை உள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன் திருச்சூர் ஆயுதப்படையில் பணிபுரிந்த போது, கொச்சியைச் சேர்ந்த பெண் டாக்டருடன் சமூக வலைதளத்தில் பழக்கம் ஏற்பட்டது.அவரை திருமணம் செய்வதாகக் கூறி, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார். பின்னர், அவருக்கு திருமணமான விபரம் பெண் டாக்டருக்கு தெரியவந்தது. இதுகுறித்து, அவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் கொச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், விஜய் யசோதரன் தலைமறைவானார். இதற்கிடையில், அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.போலீசார், அவரை பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்.
05-Apr-2025