உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர் வீட்டில் காவல் இருந்த போலீஸ்காரர் மர்ம மரணம்

அமைச்சர் வீட்டில் காவல் இருந்த போலீஸ்காரர் மர்ம மரணம்

குருகிராம்:ஹரியானா அமைச்சர் ராவ் நர்பீர் சிங் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் மர்மமான முறையில் இறந்தார். ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டம் சுக்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜக்பீர் சிங்,49. ராணுவத்தின் ஜாட் பிரிவில் பணியாற்றி, 2014ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஹரியானா மாநில போலீசில் சேர்ந்தார். குருகிராம் சிவில் லைனில் உள்ள ஹரியானா மாநில அமைச்சர் நர்பீர் சிங் வீட்டின் பாதுகாப்பு பணிக்கு கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். அமைச்சர் வீட்டின் வெளியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜக்பீர் சிங், நேற்று அதிகாலை 2:30 மணிக்கு தன் அறையில் மயங்கிக் கிடந்தார். சக போலீஸ்காரர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜக்பீர் சிங் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜக்பீர் சிங் உடல், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை