மேலும் செய்திகள்
அம்பேத்கர் சிலைக்கு தீ வைத்தவர் கைது
21-May-2025
புதுடில்லி:போலீஸ்காரர் மீது லாரியை மோதி,100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற டிரைவரை போலீசார் தேடுகின்றனர். மாளவியா நகர், ஏழாவது பட்டாலியன் கான்ஸ்டபிள் கரம்வீர். தென்மேற்கு டில்லி கபஷேரா துவாரகா அதிவிரைவுச் சாலையில், பைக்கில் வேலைக்குச் சென்றார். அதிவேகமாக வந்த லாரி, பிஜ்வாசன் சுரங்கப்பாதை அருகே முன்னால் சென்ற பைக் மோதியது. லாரியில் சிக்கிய பைக்குடன் கரம்வீர், 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயம் அடைந்தார். பொதுமக்கள் அலறியதால், டிரைவர் லாரியை நிறுத்தினார். மீட்கப்பட்ட கரம்வீர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடுகின்றனர்.
21-May-2025