அரசியல் ரீதியில் பதில்!
அமெரிக்காவில் இருந்தபடி, இந்தியாவுக்கு எதிராக பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர் பேசியது மட்டுமின்றி, அணு ஆயுத அச்சுறுத்தலும் விடுத்துள்ளார். இதற்கு மத்திய அரசு அரசியல் ரீதியில் பதிலளிக்க வேண்டும். வெறும் அறிக்கைகள் மட்டும் போதாது. எதிர்ப்பை தெரிவித்து, அமெரிக்காவிடம் இந்த பிரச்னையை எழுப்ப வேண்டும். அசாதுதீன் ஓவைசி தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,நடைமுறைக்கு எதிரானது! குடியிருப்புப் பகுதிகளில் இருந்து தெருநாய்களை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நடைமுறைக்கு எதிரானது. நாய்களை அப்புறப்படுத்தி விட்டால், தெருக்களில் குரங்குகள் சுற்றித்திரியும். பிரான்சின் பாரிசில், 1880களில் தெருக்களில் நாய், பூனைகளை அகற்றிய போது அந்நகரம் எலிகளால் நிரம்பியிருந்தது. மேனகா காந்தி முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,ராஜினாமா செய்க! வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் இருப்பதாக தேர்தல் கமிஷன் கூறினால், பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும். லோக்சபா கலைக்கப்பட்டு புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சரியாக இருக்கிறது என, தேர்தல் கமிஷன் கூற முடியாது. அபிஷேக் பானர்ஜி பொதுச்செயலர், திரிணமுல் காங்.,