உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வடகிழக்கு மாநில அரசியல் தலைவர்கள் கொந்தளிப்பு! வங்கதேசத்தை துண்டாடுவோம் என ஆவேசம்

வடகிழக்கு மாநில அரசியல் தலைவர்கள் கொந்தளிப்பு! வங்கதேசத்தை துண்டாடுவோம் என ஆவேசம்

புதுடில்லி: வடகிழக்கு மாநிலங்கள் தொடர்பாக, அண்டை நாடான வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறிய கருத்துக்கு, வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ''தேவைப்பட்டால் வங்கதேசத்தை உடைப்போம்,'' என, திப்ரா மோத்தா கட்சித் தலைவர் பிரத்யுத் தேப் பர்மன் கூறியுள்ளார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தையடுத்து, ஆட்சி கவிழ்ந்தது. ராணுவத்தின் உதவியுடன், இடைக்கால நிர்வாகம் நடந்து வருகிறது. இதன் தலைமை ஆலோசகராக, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் உள்ளார்.சீனாவின் கடனுதவியால் பல திட்டங்கள் அந்த நாட்டில் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வங்கதேசம் சென்று விட்டது. இந்நிலையில், சமீபத்தில் சீனா சென்ற யூனுஸ், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.அப்போது, 'இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், வங்கதேசத்தின் எல்லையால் சூழப்பட்டுள்ளன. வங்கக் கடலை அந்த மாநிலங்கள் அணுக முடியாது. 'அதனால், வங்கக் கடலின் பாதுகாவலனாக உள்ளதால், வங்கதேசத்தில் சீனா அதிகளவு முதலீடு செய்ய வேண்டும்' என, யூனுஸ் கூறினார்.இந்தியா - சீனா இடையேயான உறவு புதுப்பிக்கும் முயற்சி நடப்பதால், இதில் மத்திய அரசு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும், வங்கதேசத்தின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடும் கண்டனம்

குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகள், முதல்வர்கள், முகமது யூனுஸ் கருத்துக்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். திரிபுராவைச் சேர்ந்த, திப்ரா மோத்தா என்ற கட்சியின் தலைவரும், திரிபுராவை ஆண்ட மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான, பிரத்யுத் தேப் பர்மன் கூறியதாவது:வங்கதேசத்தின் தலைமை ஆலோசகரின் பேச்சு, வடகிழக்கு மாநிலங்கள் கடலை அணுகுவதற்கான மாற்று பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான புதுமையான திட்டத்துக்கு கோடிக்கணக்கான பணத்தை செலவழிப்பது, சவாலான பொறியியல் திட்டத்தை உருவாக்குவது தேவையில்லை. இதற்கு மாற்றாக, வங்கதேசத்தை உடைத்து, நமக்கான பாதையை உருவாக்குவோம். வங்கதேசத்தின சிட்டகாங்க் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோதே, நம் நாட்டுடன் இணைவதற்கு தயாராக இருந்தனர். அதுபோல, அங்குள்ள திரிபுரி, காரோ, காஷி, சக்மா மக்களும், தங்களுடைய பாரம்பரிய பகுதிகளில், மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அவர்களும் இந்தியாவுடன் இணைவதற்கு தயாராக உள்ளனர்.அதனால், நம் நாட்டின் தேசிய நலனைக் கருதியும், அந்த மக்களின் நலனைக் கருதியும், அவர்கள் வசிக்கும் சிட்டகாங்க் உள்ளிட்ட பகுதிகளை, வங்கதேசத்திடம் இருந்து உடைத்தால், கடலுக்கான அணுகல் நமக்கு கிடைத்துவிடும்.

மறந்து விடக் கூடாது

நாடு சுதந்திரம் பெற்றபோதே, இந்தப் பகுதிகளை நம்முடன் சேர்த்திருக்க வேண்டும். அப்போது தவறு செய்துவிட்டோம். வங்கக் கடலின் பாதுகாவலர் என்று யூனுஸ் கூறிக் கொள்கிறார். ஆனால், 85 வயதான அவரே, அந்த நாட்டின் ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இந்தப் பதவியில் உள்ளார். அவர் கூறும் துறைமுகத்துக்கு சில கி.மீ., துாரத்தில் தான், திரிபுரா உள்ளது என்பதை அவர் மறந்து விடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.மற்றொரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் முன்னாள் முதல்வரான பா.ஜ.,வின் பைரேன் சிங்கும், வங்கதேசத்தின் கருத்துக்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். ''இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுக்கும் வகையில், யூனுஸ் பேச்சு அமைந்துள்ளது. இதற்கான பின்விளைவுகளை அவர் நிச்சயம் சந்திப்பார்,'' என, அவர் கூறியுள்ளார்.

அவசியம் வேண்டும்

'சிக்கன்ஸ் நெக்' என்று கூறப்படும் கோழியின் கழுத்து போன்று அமைந்துள்ள சிலிகுரி காரிடார் தான், நாட்டுடன், வடகிழக்கு மாநிலங்களை இணைக்கிறது. மேற்கு வங்கத்தின் சிலிகுரியையும், வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கும் இந்தப் பகுதி, 20 கி.மீ., அகலம் மட்டுமே உள்ளது. இந்த நிலப்பகுதி, நேபாளம், வங்கதேசம் அருகே அமைந்துள்ளது. மேலும், பூடான், சீனா ஆகியவை, சில 100 கி.மீ., தொலைவில் உள்ளன. நம் நாட்டை பாதுகாக்கும் வகையில், இந்தப் பகுதியில் உடனடியாக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதைத் தவிர மாற்றுப் பாதையையும் அமைக்க வேண்டும்.- ஹிமந்த பிஸ்வ சர்மாஅசாம் முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

PATTALI
ஏப் 02, 2025 12:02

சீனா உள்ளே வந்தால் இதுபோன்ற ஆபத்துகள் உள்ளது என்று இந்தியாவிற்கு மறைமுகமாக யூனிஸ் அறிவுறுத்தியிருக்கிறார். எனவே இந்தியா உணர்ச்சிவசப்படாமல் தன்னுடைய ராஜதந்திர நடவடிக்கைகளை ஆரம்பித்து வங்கதேசத்தையும் வங்காள விரிகுடாவையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதுதான் அவருடைய மறைமுக கோரிக்கை.


Rajah
ஏப் 02, 2025 10:10

வங்க தேசத்தில் இருந்து வரும் ஊடுருவிகளை புள்ளிக் கூட்டணி ஆதரிக்கின்றதே?


Kulandai kannan
ஏப் 02, 2025 10:00

நாடு சுதந்திரம் பெற்ற சமயத்தில் நேரு செய்யாத துரோகங்களே இல்லை.


ArGu
ஏப் 02, 2025 10:31

இது தவறு. நேருவை மட்டுமே குறை சொல்ல கூடாது. காந்தியையும் சேர்த்தே சொல்ல vendum


naranam
ஏப் 02, 2025 09:54

உடைப்பதே நமக்கு நல்லது.


essemm
ஏப் 02, 2025 09:10

இந்த யூனுஸ்க்கு இந்திய அரசியல்வாதிகள் தான் உதவவேண்டும். அவரது குரலை ஒடுக்கக்கூடாது. சீனாவின் கருங்கோழிகளே எல்லோரும் ஒன்று திரண்டு. யூனுசுக்கு ஆதாரவாக குர்ல கொடுங்கள். பாவம் பயத்தில் அந்த மனுஷன் உளறி கொண்டிருக்கின்றார்.


sankaranarayanan
ஏப் 02, 2025 08:51

முதலில் அந்த மாகாபாவியிடமிருந்து நோபல் பரிசை திரும்ப பெற பாருங்கள் இவன் தேச துரோகி இவனை சும்மவே விடக்கூடாது அமெரிக்க ஏனிப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ஒரே நாளில் தீர்த்துக்கட்டவேண்டிய நாடுதான் இது. கனடா கிரீன்லாந்து உடன் இந்த நாட்டையும் அமெரிக்க ஆக்கிரமித்தால் நல்லது


GMM
ஏப் 02, 2025 07:28

வங்கதேசம் இனி உருப்படாது. தீய சக்திகள் கால் பட்டு விட்டது. வடகிழக்கு மாநில மக்கள் வங்க தேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்ற போராட்ட வேண்டும். இதில் நேபாள மக்கள் உதவ வேண்டும். தீவிர முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு பயத்தில் இடம் மாற வேண்டும். கால நிர்ணயம் செய்து இலக்கை அடைய வேண்டும். இஸ்லாம் தீவிரவாதம் பிஞ்சு குழந்தையில் கற்பிக்கப்படும் கல்வி. பிறவிக்குணம் மாறாது . வங்க தேசம் முதலில் துண்டாட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை