உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள்; அண்ணாமலை காட்டம்

மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள்; அண்ணாமலை காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'சில அரசியல் கட்சிகள் இன்னும் நம் நாட்டை மொழியின் அடிப்படையில் பிரிக்க விரும்புகின்றன' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். அவர், பிரயாக்ராஜில் நிருபர்கள் சந்திப்பில், தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பது தொடர்பாக அண்ணாமலை கடுமையாக சாடி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: சில அரசியல் கட்சிகள் இன்னும் நம் நாட்டை மொழியின் அடிப்படையில் பிரிக்க விரும்புகின்றன. தாய்மொழி அனைவருக்கும் முக்கியம்.10க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக்கொண்ட பிறகும், மகாகவி பாரதி தமிழை சிறந்த மொழி என்று அழைத்தார். எனவே மக்கள் அதிக மொழிகளைப் படிக்க வேண்டும்.தேசிய கல்வி கொள்கை ஒரு இந்திய மொழியைப் படிப்பதை வலியுறுத்துகிறது. அது எந்த மொழியாகவும் இருக்கலாம். தமிழகத்தில், மாணவர்கள் தங்கள் விரும்பும் மொழியை படிக்கலாம். அரசியல் கட்சிகள் தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Haja Kuthubdeen
பிப் 23, 2025 17:53

மொழிவாரியாகத்தானே மாநிலங்களே பிரிக்கப்பட்டுள்ளது..இந்த வரலாறே இவருக்கு தெரியாதா????


T.sthivinayagam
பிப் 23, 2025 17:19

மொழியை வைத்து காழ்ப்புனர்ச்சி காட்டும் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் -மக்கள் வேதனை


karthikeyan
பிப் 23, 2025 16:09

மதத்தை வைத்து மனிதர்களை பிரிக்கும் உங்கள் கூட்டத்திற்கு அண்ணாமலையின் பதிலென்ன???


Suppan
பிப் 23, 2025 16:55

அண்ணாமலை சார்ந்த கட்சி எல்லா மதங்களையும் மதிக்கிறது . ஆனால் திருட்டு திமுக வோ அந்த பட்டத்து இளவரசரோ சனாதனத்தை வேரறுப்போம் என்கிறது. யாருக்கு மத வெறுப்பு ? என்ன தான் 200 ரூபாய் கிடைக்கிறது என்றாலும் இப்படியா சிந்திக்காமல் கருத்திடுவது ?


Prabhakar Raj
பிப் 23, 2025 16:02

மொழியை வைத்து தானே நாடே உருவானது பிரிந்தது தமிழ் நாடு ,கேரளா ...


தமிழன்
பிப் 23, 2025 15:46

மொழியால் பிரச்சனை செய்யும் இந்த அரசியல் காட்சிகள் பண்பாடு கலாச்சாரம் கட்டி காக்கிறார்களா ? உணவு உடையில் உள்ள தமிழ் கலாச்சார மரபு மாறி விட்டதே அதை செய்ய மறுக்கும் அரசியல் காட்சிகள் வெட்டி பேச்சு பேசி மக்களை தொல்லை செய்கிறார்கள். துணை முதல்வர் உதயநிதி தமிழக மரபு படியா சட்ட மன்றத்திற்கு வருகிறார். தமிழக உணவு முறையா நடைமுறையில் இருக்கிறது. பிச்சா பர்கர், நூடுல்ஸ் என இது எல்லாம் தமிழ் கலாச்சாரமா மௌனம் கூட மொழி தான் அது இருப்பதால் தமிழ் அழிந்தனவா. இருந்தும் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், இது வியாபாரம் தான். அவர்கள் நடத்தும் பள்ளியின் தரத்திற்கு ஏற்ப அரசு பள்ளிகள் வளர்ந்து விட்டால் அவர்களுக்கு மாணவர்கள் சேர்க்கை இருக்காது, வியாபாரம் பாதிக்கும் என்ற ஒரே காரணத்தை தவிர - மக்கள் நலனில் அக்கறை இல்லாத இவர்களுக்கு வேறு ஒன்றும் இருக்க வாய்ப்பு இல்லை. மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் நாங்களா படிக்க வேண்டாம் என்கிறோம் என முதல்வர் பேசுவது கேலியாக உள்ளது.. மக்கள் காட்டும் வரி பணத்தை வாங்கும் மாநில அரசு, மக்கள் விருப்பத்திற்கு தான் நிர்வாகம் செய்ய வேண்டும். மூன்றாவது மொழில் கற்கும் வாய்ப்புகளை தட்டி பறிக்கும் தமிழக பதவி விலக வேண்டும். மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு தட்டி பறிக்கிறதை அனுமதிக்க கூடாது. தமிழக அரசு கலைக்கப்படலாம். தமிழக மக்கள் பயன் பெற மூன்றாவது மொழி கட்டாயம். இதை தான் மக்களும் மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் விரும்புகிறார்கள். வேண்டும் என்றால் ஒரு கருத்து கணிப்பு ஆன்லைன் வழியாக, ஆதார் இணைப்புடன் நடத்தி பாருங்கள். முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று தெளிவாக புரியும். மக்கள் நலனில் மட்டும் அல்ல. மாணவர்கள் நலனிலும் அக்கறை இல்லாத திமுக அரசு அடுத்த 50 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும். திமுக இல்லாத தமிழகம் படைப்போம். அரசியல் வரலாற்றில் இருந்து திமுகவை அடியோடு ஒழிப்பும். உறுதியாக வெற்றி பெறுவோம்.


பாலா
பிப் 23, 2025 15:14

மொழியை வைத்து பிரிப்பா, நகைச்சுவை இன, மூலவள அழிப்பு கொள்ளை.


Laddoo
பிப் 23, 2025 14:54

அப்படித்தானே திருட்டு கழகம் வயித்த வளக்குது


Thirumal s S
பிப் 23, 2025 14:07

மதத்தை வைத்து அரசியல் செய்வதற்கு என்ன பெயர் அண்ணாமலை.


GMM
பிப் 23, 2025 13:00

மத்திய, மாநில , உள்ளாட்சி அமைப்புகள் கடனை வகுத்து ஒவ்வொரு வாக்காளர் பெயரில் நிழல் கணக்கு வைத்து பாருங்கள் திராவிடர் பிரிவினை மூச்சு விட மாட்டார்கள். உழைக்காமல் அதிகாரத்துடன் பிழைக்க விரும்பும் கூட்டம் தான் பிரிவினை கோரும் . நண்பர் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் அப்பாவிடம் சொத்து பிரித்து கேட்க, குடும்ப கடனை பிரித்து அடைத்த பின், சொத்துரிமை என்றனர் .


Venkataraman
பிப் 23, 2025 12:49

பிரிவினைவாதத்தை பரப்பும் திமுக அரசை ஏன் இன்னும் கலைக்காமல் இருக்கிறார்கள்? மோடியையும் மத்திய அரசையும் இழிவுபடுத்தி வசைபாடும் திமுக தலைவர்களை சிறையில் தள்ள வேண்டும்.


தமிழன்
பிப் 23, 2025 16:42

சிறையில் தள்ளினாலும் என்ன பயன்.. அடுத்த 50 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட இந்த கட்சியை தடை செய்ய வேண்டும் என்று விவரமாக சொல்லுங்க.


சமீபத்திய செய்தி