உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதி அடிப்படையில் அரசியல் கட்சிகள் ஓட்டு சேகரிக்கக்கூடாது

ஜாதி அடிப்படையில் அரசியல் கட்சிகள் ஓட்டு சேகரிக்கக்கூடாது

புதுடில்லி: 'ஜாதி, மத அடிப்படையில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஓட்டு சேகரிக்கக் கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தலைமை தேர்தல் கமிஷன் எச்சரித்து உள்ளது. லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கான அறிவுறுத்தல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்படுவதாவது:அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் ஓட்டு கேட்பதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் மற்றும் ஆன்மிக உணர்வை அவமதிக்கக் கூடாது. தேர்தல் பிரசாரத்துக்கு கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின், அவற்றை மீறும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த தேர்தல்களின் போது விதிகளை மீறியதற்காக நோட்டீஸ் பெற்ற நட்சத்திர பேச்சாளர்கள், மீண்டும் விதிகளை மீறினால் நடவடிக்கை நிச்சயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்