உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாளை 57 தொகுதிகளுக்கு 6ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு

நாளை 57 தொகுதிகளுக்கு 6ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு

புதுடில்லி : ஆறாம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம், நேற்று(மே 23) மாலையுடன் ஓய்ந்தது.லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. ஐந்து கட்ட தேர்தல்களில், 428 தொகுதிகளுக்கு இதுவரை நடந்து முடிந்துள்ளன. ஏழு மாநிலங்களில், 57 தொகுதிகளுக்கு நாளை நடக்கும் ஆறாம் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.அதன்படி, பீஹாரில் எட்டு; ஹரியானா 10; ஜார்க்கண்ட் நான்கு; ஒடிசா ஆறு; உ.பி., 14; மேற்கு வங்கம் எட்டு, டில்லியில் ஏழு தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.மேலும், ஒடிசாவில், 147 சட்டசபை தொகுதிகளில், 63 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து முடிந்து விட்ட நிலையில், நாளை நடக்கும் மூன்றாம் கட்ட சட்டசபை தேர்தலில், 42 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.இந்நிலையில், 57 லோக்சபா தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று, பிரதமர் மோடி, பா.ஜ., மூத்த தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத், காங்., - எம்.பி., ராகுல், சோனியா உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Troo Picture
மே 24, 2024 13:02

தொகுதிகள் ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் மே நடக்க வேண்டிய தேர்தல், காலநிலை காரணமாக நாளைக்கு மாற்றி வைக்கப்பட்டு இருந்தது


J.V. Iyer
மே 24, 2024 06:22

பாஜக இந்த தடவை சீட்டுக்களை நெருங்கும் வெற்றி மீது வெற்றி வந்து குவியும், பாஜகவுக்கு, பிரதமர் மோடிஜிக்கு


மேலும் செய்திகள்



புதிய வீடியோ