உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதியில் பட்டு சால்வை வழங்கியதில் மோசடி: பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதியில் பட்டு சால்வை வழங்கியதில் மோசடி: பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதி : திருப்பதியில் பட்டு சால்வை எனக்கூறி பாலியஸ்டர் துணியை வழங்கி மோசடி செய்தது பக்தர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டது வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் 2014 முதல் 2025ம் ஆண்டு வரை, திருப்பதி கோவிலில் முக்கிய நபர்களுக்கு பட்டு சால்வை எனக்கூறி பாலியஸ்டர் துணி வழங்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திருப்பதி தேவஸ்தானம் தலைவர் பிஆர் நாயுடு, பட்டு சால்வைகள் குறித்து சந்தேகம் தெரிவித்ததைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவிலின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணையை துவக்கினர். அதில், முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட சால்வைகள், உண்மையில் 100 சதவீதம் பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.கோவிலின் முக்கிய நிகழ்வுகளின் போது, முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தூய பட்டு சால்வைகளுக்கு பதில், விலைகுறைந்த பாலியஸ்டர் துணி வழங்கப்பட்டுள்ளது. பட்டு சால்வை எனக் கூறி வழங்கப்பட்ட துணி ஆய்வகங்களில் அனுப்பி ஆய்வு செய்யப்பட்டது. அதில், அவை பாலியஸ்டர் துணி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக பிஆர் நாயுடு கூறியதாவது: 350 ரூபாய் மதிப்பிலான சால்வையை 1,300 ரூபாய் எனக்கூறி பணம் பெற்றுள்ளனர். இந்த வகையில் 50 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த 2015 - 2025 ம் ஆண்டு வரை மோசடி நடந்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.குறிப்பிட்ட ஒரு நிறுவனம் மற்றும் அதனைச் சார்ந்த துணை நிறுவனம் மட்டுமே பட்டு சால்வைக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஜெய்ஹிந்த்புரம்
டிச 11, 2025 00:50

2014 முதல் 2025ம் ஆண்டு வரை, திருப்பதி கோவிலில் பட்டு சால்வை எனக்கூறி பாலியஸ்டர் துணி வழங்கப்பட்டு மோசடி


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 10, 2025 21:48

எந்தக் கோவில் ஆனால் என்ன கோவில் கோவில்தான் எந்தத் தெய்வம் ஆனால் என்ன தெய்வம் தெய்வம்தான் இப்படி திருப்பதி திருப்பதி என்று மக்கள் அலைவதால்தான் அங்குள்ள பெருச்சாளிகளூம் கொழுத்து தின்ன புதுப்புது திட்டங்களைத் தீட்டுகிறார்கள். உங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள சின்னஞ்சிறு கோவில்களுக்கு சென்று மனதார கூட்ட நெரிசல் இன்றி வழிபடுங்கள்.


வெங்கட்
டிச 10, 2025 21:00

எதுக்கு பணத்தை அங்கே கொண்டு போய் கொட்டுறீங்க? அது சாமிக்குப் போய் சேர்வதில்லை. அங்கே உள்ள பெருச்சாளி ஆசாமிகளுக்கு போய் சேர்கிறது. ஆளாளுக்கு சாமி பேரைச் சொல்லி சாப்புடறானுங்க.


Sangi Mangi
டிச 10, 2025 20:25

நன்றாகவே தெரிகிறது?


c.mohanraj raj
டிச 10, 2025 19:55

ஜெகன்மோகனே நல்ல திருடர்களாக பார்த்து வேலைக்கு சேர்த்து விட்டு இருக்கின்றார்.


ஆரூர் ரங்
டிச 10, 2025 19:53

ஆண்டவன் முன் அனைவரும் சமம். எந்த பக்தரும் விஐபி களுக்கு பட்டு சால்வை அணிவிக்கும் செலவுக்காக என்றெண்ணி காணிக்கை செலுத்துவதில்லை. பட்டு என்பதே பூச்சிகளை அழித்து செய்யப்படுகிறது. அதனைப் பயன்படுத்துவதற்கும் நெய்யில் மிருகக் கொழுப்பு கலந்த குற்றத்துக்கும் வேறுபாடுண்டா?


Barakat Ali
டிச 10, 2025 19:42

இஸ்லாமியர்களிடம் இப்படி விளையாட முடியாது ........... காரணம் எங்களிடையே உள்ள ஒற்றுமை ........


Sundar R
டிச 10, 2025 18:28

பெருமைக்குரிய "தினமலர்" நாளிதழ், உள்நோக்கம் கொண்டு இதுபோன்ற காரியங்கள் செய்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.


Priyan Vadanad
டிச 10, 2025 18:28

திருப்பதியில் நடந்துள்ள இதற்காக எந்த முன்னணியினரோ அல்லது வாக்காவினரோ அலட்டிக்கொள்ள வேண்டாம். அங்கு நம்ம ஊர் நடுநிலையாளர்களை அனுப்பி ஆராய சொன்னால் போதும். சட்டம் தன் கடமையை செய்துவிடும்.


Skywalker
டிச 10, 2025 18:20

It doesn't matter whether the government is DMK, BJP etc all Hindu temples must be freed from government control and exploitation of temple resources by corrupt politicians must stop


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை