உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூரம் திருவிழா சர்ச்சை: சுரேஷ் கோபி கோரிக்கையை ஏற்க கேரள அரசு மறுப்பு

பூரம் திருவிழா சர்ச்சை: சுரேஷ் கோபி கோரிக்கையை ஏற்க கேரள அரசு மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி : கேரளாவில் பூரம் திருவிழாவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வலியுறுத்திய நிலையில், ''அதற்கு அவசியம் இல்லை,'' என, மாநில அமைச்சர் முஹமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோவிலில் நடைபெறும் பூரம் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. 30 யானைகள் அணிவகுத்து நின்று 'வண்ணக் குடை மாற்றும்' நிகழ்ச்சி மற்றும் நள்ளிரவில் வெடிக்கப்படும் வாண வேடிக்கை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் திருச்சூரில் திரள்வது வழக்கம்.இந்த ஆண்டு கடந்த மே மாதம் நடந்த திருவிழாவின் போது போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் விமரிசையாக நடத்தப்படவேண்டிய திருவிழா எளிமையாக நடந்தது.வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், முக்கிய நிகழ்வான நள்ளிரவில் நடத்தப்படும் வாணவேடிக்கை திருவிழா, விடிந்தபின் பகலில் நடத்தப்பட்டது. அரசியல் தலையீடு காரணமாகவே பூரம் திருவிழா சுமுகமாக நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், திருச்சூர் தொகுதியின் பா.ஜ., - எம்.பி.,யும், திரைப்பட நடிகரும், மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சருமான சுரேஷ் கோபி நேற்று கூறுகையில், ''பூரம் திருவிழாவுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறித்து மாநில அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.இதற்கு பதில் அளிக்கும் வகையில், மாநில பொதுப்பணித் துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான முஹமது ரியாஸ் கூறியதாவது:சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.,யை கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது, திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு அவசியமில்லை. சுரேஷ் கோபியின் இதுபோன்ற கருத்துகள் திரைப்படங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். நிஜ வாழ்க்கைக்கு சரி வராது.திருச்சூர் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதற்கு காங்கிரசிற்கு முக்கிய பங்கு உள்ளது. அக்கட்சியின் ஓட்டுக்களே, பா.ஜ.,வுக்கு விழுந்தன. எனவே, சுரேஷ் கோபியின் வெற்றி அவரால் மட்டும் வந்தது அல்ல. அதற்கு காங்கிரசே காரணம்.அது தொடர்பான உண்மைகளே இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் உள்ளன. அக்கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால், இந்த விவகாரத்தில் நடவடிக்கை ஏதேனும் எடுத்தாரா? இவை எதுவும் நடைபெறாத நிலையில், பூரம் திருவிழா சர்ச்சை குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என சொல்வது சரியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

என்றும் இந்தியன்
நவ 01, 2024 18:35

இதைத்தான் நம் முதல்-அமைச்சர் சொன்னாரே திருட்டு திராவிட அறிவிலி மாடல் இந்தியா பூராவும் என்று???இப்போது வெளியே தெரிவது 1 முஸ்லீம் மருமகன் முதல்வர் கேரளா பின்னர் ஆயி விஜயன் அரசில் 2 சித்தம் கலங்கிய ராமையா கர்நாடகாவில் 3 அடுத்த மாநிலம் என்ன என்று விரைவில் தெரிய வரும்


தத்வமசி
நவ 01, 2024 16:54

தங்களை யார் ஆளவேண்டும் என்கிற அக்கறை இல்லாத சமுதாயம் உறுப்படாது.


Thirumal Kumaresan
நவ 01, 2024 16:40

கோவில் திருவிழாவில் ஏன் கட்டுபாடு என கேடடாள் அதற்க்கு விளக்கம் அளித்தால் மந்திரி அதை விட்டு ....


karthik
நவ 01, 2024 16:18

உச்ச நீதிமன்றம் சிபிஐ கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என்று சொன்னது காங்கிரஸ் ஆட்சியில். எப்படி மக்களை குழப்புகிறார்கள்.


GMM
நவ 01, 2024 15:12

பூரம் திருவிழா கட்டுப்பாடு குறித்து மாநில நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும். சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்பு விசாரணையை மத்திய அரசு அரசியலுக்கு பயன்படுத்தும் என்றால் , மாநில போலீசை ஆளும் கட்சியும் பயன்படுத்த முடியும். மத்திய விசாரணை அமைப்பை மாநில நிர்வாகம் தடுக்க முடியாது. முடக்க முடியாது. உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு முன் தலையிட முடியாது. சிபிஐ கூண்டுக்கிளி என்றாலும் குற்றவாளி யாராக இருந்தாலும் உத்தரவிட்டு கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.


Ram
நவ 01, 2024 14:12

கம்யூனிஸ்டுகளுக்கு இந்துமதத்தை ஒடுக்க நினைக்கும் மினாரிட்டிகளுக்கும் சமாதி கட்டவேண்டும்


Ganapathy
நவ 01, 2024 13:35

ஊரு உலகம் முழுக்க கடன்பத்திரம் வெளியிட்டு உன்னொட பப்பூ காங்கிரஸ் வாங்குன 4 பில்லியன் எண்ணெய்கடனை உன்னோட அடாவடி அய்யோக்கிய ஹலால் வசூல் 4 டிரில்லியன் வசூல் பணத்துல இருந்து கொடுத்தா என்ன கொறஞ்சா போயிருவே?


Saleem
நவ 01, 2024 11:22

பெட்ரோல் விலை குறைப்பது பற்றி கேட்டால் சுரேஷ்கோபி வாய் திறக்கமாட்டார்


Amsi Ramesh
நவ 01, 2024 12:20

கொண்டை தெரியுது பாய் .


karthik
நவ 01, 2024 16:22

இது ஒன்றை தவிர வேறு என்ன தெரியும் பாயி? இந்த வாரத்தில் மோடியின் மத்திய அரசு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் லண்டன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட 213 டன் தங்கத்தை 400 மில்லியன் டாலர்கள் குடுத்து மீட்டு இந்தியாவிற்கு கொண்டுவந்துள்ளது தெரியுமா உங்களுக்கு? எத்தனை நாளுக்கு தான் இப்படி பெட்ரோல் விலை குறையல புண்ணாக்கு விலை குறையல என்று சொல்லிக்கொண்ண்டே இருப்பீர்கள்? ஆட்டுக்கறி விலையை எவ்வளவு அதிகம் உயர்த்தி உள்ளீர்கள் என்று தெரியுமா?


கடுகு
நவ 01, 2024 11:10

சனாதனத்தை ஒழிக்க நினைக்கும் இந்த கம்யூனிஸ்ட்களை ஒழித்துக்கட்டவேண்டும்


kantharvan
நவ 01, 2024 13:25

தாழிச்சிடலாம்


C.SRIRAM
நவ 01, 2024 10:27

இந்த அரைகுறை அமைச்சர் அந்த மாநில ஊழல் முதல்வரின் இரண்டாவது மாப்பிள்ளை


சமீபத்திய செய்தி